167 82. தீநட்பு - Bad friendship | | |
1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. | Swallowing love of soulless men Had better wane than wax anon.
| 811 | | |
2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். | Who fawn in wealth and fail in dearth Gain or lose; such friends have no worth.
| 812 | | |
3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். | Cunning friends who calculate Are like thieves and whores wicked.
| 813 | | |
4. அமரகத்து ஆற் றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. | Better be alone than trust in those That throw in field like faithless horse.
| 814 | | |
5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. | Friends low and mean that give no help- Leave them is better than to keep.
| 815 | | |
6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். | Million times the wise man's hate Is better than a fool intimate.
| 816 | | |
7. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். | Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers.
| 817 | | |
8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். | Without a word those friends eschew Who spoil deeds which they can do.
| 818 | | |
9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. | Even in dreams the tie is bad With those whose deed is far from word.
| 819 | | |
10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. | Keep aloof from those that smile At home and in public revile.
| 820 | | |
|