169 83. கூடாநட்பு - False friendship | | |
1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. | The friendship by an enemy shown Is anvil in time, to strike you down.
| 821 | | |
2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். | Who pretend kinship but are not Their friendship's fickle like woman's heart.
| 822 | | |
3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. | They may be vast in good studies But heartfelt-love is hard for foes.
| 823 | | |
4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். | Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles.
| 824 | | |
5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. | Do not trust in what they tell Whose mind with your mind goes ill.
| 825 | | |
6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். | The words of foes is quickly seen Though they speak like friends in fine.
| 826 | | |
7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். | Trust not the humble words of foes Danger darts from bending bows.
| 827 | | |
8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. | Adoring hands of foes hide arms Their sobbing tears have lurking harms.
| 828 | | |
9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. | In open who praise, at heart despise Cajole and crush them in friendly guise.
| 829 | | |
10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் | When foes, in time, play friendship's part Feign love on face but not in heart.
| 830 | | |
|