1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். | This is folly's prominent vein To favour loss and forego gain.
| 831 | | |
2. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். | Folly of follies is to lead A lewd and lawless life so bad.
| 832 | | |
3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். | Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness.
| 833 | | |
4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். | No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns.
| 834 | | |
5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. | The fool suffers seven fold hells In single birth of hellish ills.
| 835 | | |
6. பொய்படும் ஒன்றொ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். | A know-nothing fool daring a deed Not only fails but feels fettered.
| 836 | | |
7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. | Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast.
| 837 | | |
8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். | Fools possessing something on hand Like dazed and drunken stupids stand.
| 838 | | |
9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல். | Friendship with fools is highly sweet For without a groan we part.
| 839 | | |
10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். | Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet.
| 840 | | |
|