பக்கம் எண் :

154
 

(க-து.)பற்றில்லாமலிருந்தலே பெருந்தன்மையாகும்.

(வி-ம்.)சேண் நீங்குதல் மீண்டும் பெறற்கருமை தேற்றி நின்றது. காதலவர்: ஒரு சொல்; ‘இளமை நீங்குதலால்' என்னும் குறிப்பால், சிறப்பாக அது மனைவியர் மேல் நின்றது. உம்மை, இறந்தது தழீஇயது. கருத்தென்றது ஈண்டு விருப்பம். போலும் என்பது ஒப்பில் போலி.1

(1)

182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.

(பொ-ள்.)இல் சார்வின் ஏமாந்தேம் - மனை வாழ்க்கைச் சார்பினால் களித்திருக்கின்றேம்; ஈங்கு அமைந்தேம் - உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லா நலங்களிலும் நிறைத்திருக்கின்றேம்; என்று எண்ணி பொச்சாந்து ஒழுகுவர் பேதையர் - என்று கருதி அறிவிலா மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்து ஒழுகுவர்; அச் சார்பு நின்றனபோன்று நிலையா என உணர்ந்தார் என்றும் பரிவது இலர் - ஆனால், அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற் காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்று உணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றை விரும்புதலின்று யொழுகுவர்.

(க-து.)எல்லா உலக நலங்களும் ஒருங்கமைந்த காலத்தும் அவற்றிற் பற்றின்றி நிற்றலே பெருந்தன்மை யாகும்.

(வி-ம்.)ஏமாத்தல் - மிக இன்புறுதல்; அமைதல் - குறைவின்றியிருத்தல். இரண்டும் தெளிவின் பொருட்டு இறந்த காலத்தில் வந்தன. "இயற்கையுந் தெளிவுங்


1. தொல். இடை. 30.