(பொ-ள்.)உறைப்பு அரு காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்று நீரையுடைய சிறிய நீர்நிலை இறைத்து உண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும் என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோல வறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும், சாயக்கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவான காலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல்போலப் பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்த காலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும். (க-து.)நிலைமை குறைந்த காலத்தும் பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலே பெருந்தன்மையாகும். (வி-ம்.)அருமை இரண்டிடத்தும் இன்மைமேற்று, கேணி என்பது மணற்பரப்பில் இயல்பாக அமையும் ஊற்றுடைய சிறிய நீர்நிலை. தொல்காப்பிய வுரையிற் "சிறுகுளம்"1எனப்பட்டது. கொடைக்கடனும் அரிது என்க. பெரியாரியல்பை உவமையுடன் உரைக்குங்கால் மற்றையாரியல்பும் உடனுரைக்கப்பட்டது. (4) 185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச் 2செய்வர் செயற்பா லவை. (பொ-ள்.)உறுபுனல் தந்து உலகு ஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்து உலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழி ஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும் தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும் ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ள காலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து, கெட்டு உலந்தக்
1. தொல் : எச். 4. நச். 2. நாலடி. 15 : 7, 16 : 3.
|