கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச் செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டு நிலையழிந்த காலத்தும் மேன்மக்கள், சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம் செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர். (க-து.)எந் நிலையிலுந் தங் கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும். (வி-ம்.)கல்லும ஊற்றென வினைத்தொகையாகக் கொள்க. பலர்க்குமெனவும், சிலர்க்கேனுமெனவுந் தந்துரைக்க. யாண்டுஞ் செயற்பாலவை செய்தலே பெரியோரியல்பாதலின், பலர்க்காற்றி, சிலர்க்காற்றி என்ற பின்னும் ‘செய்வர் செயற்பாலவை' என ஆசிரியர் முடித்துக்காட்டினார். இதனால், உதவுதலென்பது எந் நிலையிலுஞ் செயற்பாலதாங் கடமையாதலும் பெறப்பட்டது. (5) 186. பெருவரை நாட! பெரியோர்கட் டீமை கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும். (பொ-ள்.)பெரு வரை நாட - பெரிய மலைகளையுடைய நாடனே!. பெரியோர்கண் தீமை கருநரைமேல் சூடேபோல் தோன்றும் - மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்த வெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித் தெரியும்; கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் - அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக் கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும், சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் - கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறு விளங்கித் தெரியாமல் மறைந்துவிடும். (க-து.)மேன்மக்களிடம் சிறு குற்றமும் உண்டாகாமலிருத்தல் நல்லது. (வி-ம்.)சூட்டின் வடு நன்கு தெரிதல்வேண்டி நரையெருது கூறப்பட்டது. நரை : ஆகுபெயர் : கருவென்னும் அடைமொழி முதன்மைப் பொருட்டாய்ச் சிறந்த
|