பக்கம் எண் :

167
 

(பொ-ள்.)சிதலை தினப்பட்ட ஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுது அதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் - தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால், தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன் பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும்.

(க-து.)தந்தையின் தளர்ச்சியைக் காத்தற்கு மைந்தன் முயற்சியுடையனா யிருத்தல் வேண்டும்.

(வி-ம்.)சிதலை யென்பதற்கு உருபு விரித்துக் கொள்க. மதலை - வன்மையுடையதென்னும் பொருளது. மற்று : அசை. மறைப்ப என்றார், முயற்சியாலுண்டாகும் நன்மக்கள். ‘தந்தையின் தளர்ச்சியை அவர்க்குத் தோன்றாதபடி செய்து மகிழ்வித்தலின் "தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன, ஓங்கு குலம் நையஅத னுட்பிறந்த வீரர், தாங்கல்கட னாகும்"1என்றார் பிறரும்.

(7)

198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.

(பொ-ள்.)யானை வரிமுகம் பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமா மதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப் புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலிய கால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சி வலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றி விளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாது தங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம் தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடிய செயல்களைச் செய்வார்களோ?


1. சிந். காந்தரு. 6.