(க-து.)முயற்சியுடையார்க்கு எந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள் செய்யும்படி நேராது. (வி-ம்.)தலைவருவ : பெயர், மதுகை, ஈண்டு-முயற்சி வலிமை. ‘வள்ளுகிர் நோன்றாள்' என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்க செயல்வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில் ‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கேற்ப உவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும் எனவும் உரைத்துக்கொள்க. "தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை"1பெறப்பட்டது. (8) 199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை. (பொ-ள்.)தீம் கரும்பு ஈன்ற திரள் கால்உளை அலரி தேன் கமழ் நாற்றம் இழந்தாங்கு - இனிப்பாகிய கருப்பங் கழி தோற்றிய திரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர் தேனோடுகூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல், பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக்கடை - தன் புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரிய அரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால், ஓங்கும் உயர்குடியுட் பிறப்பின் என் ஆம் - மிக்க உயர்குடியுட் பிறத்தலால். மட்டும் யாது பயனுண்டு? (க-து.)அரிய முயற்சித்திறம் இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனிய தோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை. (வி-ம்.)உளையென்றது ஈண்டுக் குதிரை சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர்போல் மென்மையும் செறிவுமுடைய குஞ்சம் என்றற்கு. இதனாற் சாயலுடைய தோற்றம் பெறப்பட்டது. அலரி "முல்லை அரும்பவிழ்
1. திரிகடு. 27.
|