‘கருனையைப் பேரும் அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார். அவர் நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. உம்மை : இழிவு சிறப்பு. நீரென்றது புல்லரிசிச் சோற்றில் ஊறிய நீர். விடும் : துணிவுப் பெருளுணர்த்திற்று. (10) 21. சுற்றந்தழால் [உறவினர் நீங்கிவிடாதபடி அவரைத் தழுவியொழுகுதல்.] 201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். (பொ-ள்.)வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய் மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத் துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும் தாய் தன் தொடையில் மகனைக் கண்டு மறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம் - முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் - ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக் கண்டவளவில் நீங்கும். (க-து.)முயற்சிகளினிடையே தோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்கு அவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரிய சுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின், அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும். (வி-ம்.)‘வயா' வென்பதைத் தொல்காப்பிய வுரையில்1"கருப்பந்தாங்கி வருத்தமுற்று, நுகரப்படும் பொருண் மேற்செல்லும் வேட்கை" என்பர் நச்சினார்க்கினியர். ஈன்றக்கால் என்பதை ஈண்டு, ஈன்ற அக்கால் என்று பிரிக்க. மகனென வழக்கு நோக்கி ஆண்பாலாகக்
1. தொல். உரி. 73.
|