பக்கம் எண் :

171
 

கூறினாரேனும் ஏனைப் பாலுக்கும் ஒக்கும். தான் அசாவினாலுற்ற வருத்தமெனவும், தன் உசாக்கேளிரெனவும் கொள்க.

(1)

202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.

(பொ-ள்.)அழல் மண்டு போழ்தின் அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல்1பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.

(க-து.)மிக்க உழைபெடுத்துச் சுற்றந் தழுவி வாழ்தலே சிறந்த ஆண்மகனது கடமையாகும்.

(வி-ம்.)உவமைக்கும் பொருளுக்கும் ஏற்பன வருவித்துக் கொள்க. நேரொப்ப என்றார், பயனும் வேறுபாடுங் கருதாது இடரொன்றே கருதித் தாங்கி யென்றற்கு. துய்ப்ப எனப் பிறர் வினையாற் கூறினார், அவர் அத்துணை உரிமையாய் நுகருமாறு பிறர்க்குரியனாய் வாழ்தல் வேண்டுமென்பது கருதி, "என்பும் உரியர் பிறர்க்கு"2என்றார் பெருநாவலரும், வருந்தி வாழ்தலாவது முயற்சியின் உழைப்போடு வாழ்தல்.

(2)


1. குறள். 22 : 6.
2. குறள். 8 : 2.