பக்கம் எண் :

172
 

203. அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

(பொ-ள்.)அடுக்கல் மலை நாட - ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே, தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் - தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்று கூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பல காய்ப்பினும் இல்லையே தன் காய் பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்க காய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத் தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில் இல்லையே.

(க-து.)தம்மைச் சேர்ந்தவரை ஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.

(வி-ம்.)அடுக்கலாகிய மலையென்க. ‘பெரியோர் தற்சேர்ந்தவரை' என்பது ஒருமை பன்மை மயக்கம். எடுக்கலம் என்பதற்கு நிலையுயர்த்தோம் என்பது பொருள். என்னாரென்பது என்று கைவிடார் என்னுங் கருத்துடையது. வலிய காய் என்றமையாற் பெரிய காய் என்பதும் பெறப்படும். உவமையிற் காய்க்கு வலிமை கூறியது, பொருளில் தற்சேர்ந்தவரின் இன்னல் மிகுதியுணர்த்தும். பல பல என்னும் அடுக்கு மிகுதிமேற்று, எடுத்துக் காட்டுவமை.

(3)

204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.

(பொ-ள்.)உலகு அறியத் தீரக் கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கி நேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள் நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களே நிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத் தாங்கு