பக்கம் எண் :

174
 

(வி-ம்.)அடைந்தாரது இடது தீர்த்தலொன்றே கருதுவாரென்பது முதலிரண்டு அடிகளின் கருத்து. ‘என்னும்' என்பது சிறிதும் என்னும் பொருட்டாதல், "என்னும் பனியாய்"1என்பதனாலுங் காண்க தொலை மக்கள் - நிலை தொலைந்த மக்கள் ; என்றது ஆதரவில்லா தவரென்றற்கு. ‘தீர்ப்பாரே' யென்னும் ஏகாரம் பிரிநிலை தலைமக்கள் - தலைமையுடைய மக்கள்; அயலாரும் அவரைத் தமக்குத் தலைவராகக் கொள்வரென்றற்கு ‘யார்மாட்டு' மென்றார்.

(5)

206. பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது.

(பொ-ள்.)பொற்காலத்துப் பெய்த புலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலான உண்கலத்தில் இட்டுவைத்த புலியின் நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம் பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார் கைத்து - மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து, உண்டலின் - உண்ணுதலைவிட, உப்பு இலிப்புற்கை - உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை, உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்ற சுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது - எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.

(க-து.)உள்ளன்புடைய சுற்றத்தார் எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர்.

(வி-ம்.)புழுக்கல், அவித்தெடுக்கப்பட்ட சோறு, அமராரென்பது உள்ளன்பில்லாதவரை, உப்பும் என இழிவு சிறப்பும்மை கொள்க. உயிர் போற் கிளைஞரென்றார். உள்ளன்புடையவரென்னும் பொருட்டு, உண்ணுதல் என்னுஞ் சொல் இசையெச்சத்தால் தொக்கு நின்றது. உதவும் பொருளே நன்மை தருவதன்று, உதவுவோர் சால்பே நன்மை தருவதாமாகலின் இங்ஙனங் கூறினார். "உதவிவரைத்தன் றுதவி உதவி செயப் பட்டார் சால்பின்


1. பரிபா. 6 : 81.