வரைத்து"1என்றார் நாயனாரும், மேல்வருஞ் செய்யுளும் இக்கருத்துடையது. (6) 207. நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய், அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந் தமராயார் மாட்டே இனிது. (பொ-ள்.)நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனை வேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம் உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடான கறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்; அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார் மாட்டே இனிது - பிற்பகற்போழ்தில் கீரையுணவு இடுவராயினும் உறவினரானோரிடமே இனிமையாயிருக்கும். (க-து.)சுற்றத்தா ருதவியே இன்பந் தரும். (வி-ம்.)நாள் என்றது, நாளின் முதற்காலம்; முற்பகல்.2நள்ளாதார் - நண்ணாதவர்; அன்பினால் அணுக்க மில்லாதவரென்க. உதவும் எண்ணத்தோடு கூடியதாயினுமென்றற்கு ‘வேளாண்மை' என்னுஞ் சொற்கொடுத்துக் கூறப்பட்டது. ‘நாள்வாய்' என வந்தமையின் வெங்கருனை யென்னுமிடத்து ‘வெம்' என்பது வெப்ப முணர்த்திற்று. கருனை - கறிகளோடு கூடிய உணவு. ‘கருனை' யென்பதும் ‘அடகு' என்பதும் முறையே உணவின் உயர்வு தாழ்வு குறித்தற்கு வந்தன. பெறினும் இடுவரேனும் என்னும் உம்மைகள் எதிர்மறைப் பொருளன. (7) 208. முட்டிகை போல முனியாது வைகலுங் கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டா ரெனப்படு வார்.
1. குறள். 11 : 5. 2. நாலடி. 17 : 6.
|