பக்கம் எண் :

177
 

இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர் இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்து அவரோடு துன்புறுவன துன்புறாவிடின்.

(க-து.)சுற்றந் தழுவுதலால் துன்பம் வரினும் அதுவே செய்யத்தக்கது.

(வி-ம்.)அவரோடு துன்புறாக்கால் மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க. எழீஇ யென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும் பொருட்டு, "ஒள்வாள் தானை உருத்தெழுந்தன்று,"1என்புழிப்போல.

(9)

210. விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.

(பொ-ள்.)விருப்பு இலார் இல்லத்து வேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்பு ஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்து உண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடான பொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத் தரும்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து - அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக் கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும்.

(க-து.)சுற்றத்தாரிற் சிலர் எளிய நிலையினரேனும் அவர் அன்புடையவராகலின் அவர் தழுவுதற்குரியர்.

(வி-ம்.)‘வெருகு' உயிர்த்தொடர் மொழியாதலின் வல்லெழுத்து இரட்டிற்று.2உடனிருத்தி உணவிடாமையின்


1. புறப். வெ. 37.
2. தொல். குற்றிய. 6