பக்கம் எண் :

614யுத்த காண்டம் 

சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்

சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி.

 

இந்திர குருவும் அன்னார் - தேவ குரு வியாழனை
நிகர்த்தவராய்; எனையவர் என்ன நின்ற- எத்துணைப் பேர்
எனக் கருதுமாறு பலராக நின்ற; மந்திர விதியினாரும்;-
மந்திர விதிகளில் தேர்ந்தவரும்; வசிட்டனும்- மாமுனி
வசிட்டரும்; சந்திர கவிகை ஓங்கும் - நிலவென ஒளிரும்
வெண்கொற்றக் குடை உயர்த்திய; தயரதராமன் - தசரத
ராமனுக்கு; தாமம்- ஒளிமிக்கதும்; சுந்தரம்- அழகு
வாய்ந்ததுமான; மவுலி சூடும் - திருமுடி சூடுகின்ற; ஓரையும்
நாளும் தூக்கி
- நல்வேளையையும் நாளையும் ஆராய்ந்து;
வரைந்து விட்டார் - எழுதி அனுப்பினார்.
 

(25)
 

10315.

அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,

இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து

இறுத்தார் என்றால்,

தொடுக்குறு கவியான் மற்றைத் துழனியை இறுதி

தோன்ற

ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து

ஒருவற்கு உண்டோ?

 

அடுக்கிய உலகம் மூன்றும்- ஒன்றன் மேல் ஒன்றாகத்
திகழும் மூன்று உலகங்களிலும்; ஆதரத் தூதர்- ஆர்வம் மிக்க
தூதர்கள்;கூற -   (திருமுடி சூட்டு நிகழ்ச்சியை)   எடுத்துச்
சொல்ல; இடுக்கு ஒரு பேருமின்றி -    சிற்றிடம்     கூட
வெற்றிடமாக இல்லாமல்; அயோத்தி   வந்து  இறுத்தார்
என்றால்
- (அத்துணைப் பேரும்);    அயோத்தியில்  வந்து
தங்கினார்கள் எனில்,     மற்றை- வேறு;     துழனியை -
பேரொலியை; இறுதி தோன்ற- முடிவாக;    ஒடுக்குறுத்து -
தொகுத்து; தொடுக்குறு கவியான்-   புனைகின்ற   கவியால்;
உரைக்கும் தன்மை - எடுத்துரைக்கும் ஆற்றல்;நான் முகத்து
ஒருவற்கு உண்டோ
- பிரம தேவனுக்கும் இருக்குமோ? (இராது
என்றபடி.)
 

(26)
 

10316.

அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,

செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,