பக்கம் எண் :

636யுத்த காண்டம் 

தோள்வளையின் பெருமையை இந்நிலவுலகில் யாரால் அறிந்து
சொல்ல முடியும்.
 

(18)
 

10350.

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை

ஆரத்தோடும்

மன்னும் நுண் தூசும், மாவும், மதமலைக்கு அரசும்;

ஈயா,

'உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு

இலாதாய்!

மன்னுக, கதிரோன் மைந்தன்தன்னொடும் மருவி'

என்றான்.

 

ஐயன்- இராமன்; அவனுக்கு- அங்கதனுக்கு;பின்னரும் -
மேலும்; பெருவிலை ஆரத்தோடும்- மிக்க     விலை உடைய
முத்துமாலையோடும்; மன்னும் நுண் தூசும்- நிலைபெற்ற நுண்ணிய
பட்டாடையும்;  மாவும் -   குதிரையும்;மதமலைக்கு அரசும்-
யானையும்;   ஈயா- அளித்து;  'உன்னை நீ அன்றி இந்த
உலகினில் ஒப்பு இலாதாய்!
- உனக்கு நீயே அல்லாமல் இந்த
உலகில் வேறு உவமை சொல்ல முடியாமல் சிறந்தவனே!கதிரோன்
மைந்தன் தன்னொடும் மருவி மன்னுக
- சுக்கிரீவனோடும்
பொருந்தி வாழ்க;என்றான் -.
 

(19)
 

10351.

மாருதிதன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின்

நோக்கி,

'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று

செய்த

பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை;

பைம் பூண்

போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப்

புல்லுக!' என்றான்.

 

ஐயன் மாருதி தன்னை மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி -
இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு இனிமையாக   அருட் பார்வை
பார்த்து;    'பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! - பசிய
பூண் அணிந்த போர்க்குத்  தகுதியாகிய     வலிய தோளை
உடையவனே! நீ அலால் ஆர் உதவிடுதற்கு ஒத்தார்? - நீ
அல்லாமல் வேறு யார் உதவி செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்;