பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்637

அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது
இல்லை
- அன்று இராவணயுத்தத்தின் போது நீ ஆற்றிய பெரிய
உதவிகளுக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறாகிய செயல் வேறு
எதுவும் இல்லை; 'பொருந்துறப் புல்லுக' - என்னை நன்கு
தழுவிக் கொள்வாயாக, இதுவன்றி வேறு கைம்மாறு இல்லை;
என்றான்-.
 

அனுமனை 'என்னைத் தழுவிக் கொள்க' என்று இராமன் கூறவே
இராமன்     தழுவப்பட்டவன்    ஆகிறான்.     தழுவுகின்றவன்
உயர்ந்தோன் என்னும்     முறைப்படி   இராமன்    இப்படிக்
கூறியதனால் அநுமனைத் தன்னினும் உயர்ந்தவனாக ஆக்கினான்;
தனக்குக் கைம்மாறு    கருதாமல்    உதவி    செய்தவர்களைத்
தன்னினும் உயர்ந்தோராக ஆக்கிவிடுதல் இராமனது பண்பு நலம்
ஆகும் என்பது திருச்சி   பேராசிரியர்   இரா. இராதகிருஷ்ணன்
அவர்கள் வழங்கிய நயவுரை.
 

''போர் உதவிய திண் தோளால் பொருந்துறப் புல்லுக''
என்பது மேடை ஏறிய பாடம். இனி மாருதியைத் தழுவிக்
கொள்ளச் சொல்லவே அவனுக்குள் இவன் உடம்பு
அடங்கியதாகும். எனவே அனுமனுக்குத் தன்னுடம்பையே
கொடுத்தான் ஆயிற்று. அசோகவனத்தில் 'இராம' நாமம்
சொல்லி பிராட்டியைக் கொடுத்தான். இராவண வதத்தில்
இருமுறை இளைய பெருமாளையும் ஒருமுறை பெரிய
பெருமானையும் மீட்டுக் கொடுத்து 'நின்னின் தோன்றினோம்'
(கம்ப.8812) என்று சொல்ல வைத்தான். எரி வீழ்ந்து இறந்து புக
எண்ணிய பரதனைக் காத்து உயிர் கொடுத்து நிறுத்தினான்.
இங்ஙனம் நால்வர் உடம்பையும் நிறுத்திய அவனுக்குத் தன்
திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாக ஆகும்
என்று கருதித் தழுவிக் கொள்ளச் சொன்னான் ஆகும்; அவன்
திருமேனி சகலமும் ஆய் இருப்பதன்றோ ஆதலின் அவன்
திருமேனி அநுமனுக்கு எல்லாம் கொடுத்ததாக ஆயிற்று என்பது
என் குருநாதர் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன்
அவர்கள் கருத்து.
 

(20)
 

10352.

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு

தானை

முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும்

நோக்கி,

பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை

மென் தூசும்,

வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு

சீரான்.