பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்311

2169.கண்ட கவுணியக் கன்றுங் கருத்திற் பரவுமெய்க் காதற்
றொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற வணைந்தங் கரசு மெதிர்வந் திறைஞ்ச
மண்டிய வார்வம் பெருக மதுர மொழியருள் செய்தார்.
271
     2167. (இ-ள்.) வாக்கின்......கேட்டு - பெருவிறலுடைய வாக்கின் மன்னவனார் வந்து அணைந்தார் என்று கேட்டு; பூக்கமழ்....... பெருந்தகையாரும் - நீர்ப் பூக்கள் மணம் வீசும் தடங்கள் சூழ்ந்து சீகாழியில் வந்தருளிய பெருந்தகையாராகிய பிள்ளையாரும்; "ஆக்கிய நல்வினைப்பேறு" என்று - இது முன் செய்த நல்வினையினால் வந்தபேறு ஆகும் என்று கொண்டு; அன்பர்.....பொழுதில் - அன்பர் திருக்கூட்டத்தினோடும் கூடி அவரை வரவேற்கும் பெருவிருப்பத்தினோடும் எதிர்கொள்வதற்காக வந்து சேரும் பொழுதிலே;
269
     2168. (இ-ள்.) சிந்தை......திருநீறும் - சிந்தையினிடத்தே இடையறாது பெருகுகின்ற அன்பின் பெருக்கும், திருமேனியில் அசைவும், கந்தையும் மிகையாம் என்ற கருத்தும், கையினிடமாகத் திருவுழவாரப்படையும், வந்து பெருகி வழிகின்ற கண்ணீர் மழையும், திருமேனியில் விளங்குகின்ற திருநீறுமாக; அந்தமிலா......அணைய - அந்தமில்லாத திருவேடத்தை யுடைய அரசுகளும் எதிரில் வந்தணைந்தாராக;
270
     2169. (இ-ள்.) கண்ட............தொழுதே - அவ்வாறு வரக்கண்ட கவுணியப் பிள்ளையாரும் "கருத்திற் பரவுகின்ற உண்மையன்பின் பெருக்குக் கிடமாகிய தொண்டர் திருவேடம் நேரே வந்து தோன்றியது" என்று கொண்டு தொழுது கெண்டவாறே; அண்டரும் போற்ற அணைந்து - தேவர்களும் துதிக்கும்படி அங்குச் சேர்ந்து; அரசும்........எதிர்வந்து இறைஞ்ச - அப்போது அரசுகளும் எதிரில் வந்து பணிய; மண்டிய......அருள் செய்தார் - கூர்ந்த ஆசை பெருக அவர்க்கு மதுர மொழிகளை யருளிச் செய்தார்.
271
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
     2167. (வி-ரை.) பிள்ளையார் திறங்கேட்டு இறைஞ்சுதற்காக என அரசுகள் செயலை (2166) ஒரு பாட்டினாற் கூறினார். இச் செயலை முன் அரசுகள் புராணத்துள் (1443 - 1444 - 1445) மூன்று திருப்பாட்டுக்களினால் விரித்தருளினர். அது போலவே அரசுகளைக் கண்ட ஆளுடைய பிள்ளையார் செயலை முன் (1446) ஒரு பாட்டாற் கூறியதனை ஈண்டு இம்மூன்று பாட்டுக்களால் விரித்தருளினர். பிள்ளையாரைக் கண்டிறைஞ்சுதற்கண் அரசுகளுக்கு இருந்த ஆர்வத்தினளவு அரசுகளைக் கண்டு தொழுதலிற் பிள்ளையார்பாலும் ஆர்வமும் அன்பும் நிறைந்திருந்தன என்பது குறிப்புப்போலும். அரசுகளது உட்கொண்ட கருத்தை அம் மூன்றாலும் பிள்ளையாரது உட்கிடையை இம்மூன்றாலும் உணர்த்தியதும் காண்க.
     வாக்கின் பெருவிறன் மன்னர் - திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தராயின திறத்தினை அரசுகள் கேட்டதுபோலப் பிள்ளையாரும் வாக்கின் பெருவிறன் மன்னராயின செய்தியைக் கேட்டருளினர் என்பது இவ்வடைமொழிகளின் குறிப்பு.
     வந்தணைந்தார் - தாம் சென்றடையாது அவர் தாமே வந்து கூடினர் என்பது வந்து என்ற குறிப்பு. "உடையவர் தாமே வந்தார்" (475).