பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்331

வுடைய மாநாகம்; - (12) நால்வாய் - தொங்கும்வாய் - துதிக்கை; நாலுதல் - தொங்குதல்;-(14) ஒருதனு மாமேருவாகிய ஒப்பற்றவில்; இருகால் - இரண்டு கால்களையும் :- (18) இருவளி - இடைபிங்கலை வழி செல்லும் வளி; ஒருங்கிய - மூலாதாரத்தில் ஒடுக்கிய; இருபிறப்பு - உடற்பிறப்பும் உபநயன உபதேசங்களாற் பெற்ற ஞானப் பிறப்பும்; சூறை - சந்திக்கடமைகள்;-(21) ஐவேள்வி - சிவ பூசை - குருபூசை - மாகேசுவரபூசை - மறையவர்க்குணவு - அதிதிப்புசிப்பு என்பன; பிரமயாகம், தேவயாகம், மானுடயாகம், பிதிர்யாகம்; பூதயாகம் என்பாருமுண்டு.-(22) ஆறங்கமுதலெழுத்தோதி வரன் முறைபயின்று - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு செயல்களையும் மறைவழியே செய்தும், பிரணவமாதி மந்திரங்களுடன் வேத வேள்விகள் செய்தும்; ஆறங்கம் - சிக்கை, வியாகரணம், கற்ப சூத்திரம், சந்தோ விசிதம், நிருத்தம், சோதிடம் என்ற வேத அங்கங்கள் ஆறு என்றலுமாம்; - (27) பாணி - நீர்ப் பெருக்கு; - (36) ஐயுறும் அமணர் - உண்டு இல்லை என்ற ஐயப்பாட்டில் பொருணிச்சயம் செய்பவர். "தெளியா தொருபொருளே பொய்யு மெய்யுமா மென்னும்" (1875); "அத்திநாத்தி" என்ற அவரது மந்திரம் இப்பொருட்டு; அறுவகைத்தேரர் - "ஞானம் கணந்தோறும் தோன்றி யழியும்; மற்றும் உள் பொருள் எனப்பட்டவையெல்லாங் கணந்தோறும் தோன்றி யழியும்; இந்த ஞானத்திற் றோன்றிய வாசனை அழிவதே முத்தி என்ற கொள்கையுடைய புத்தர்; அறுவகை - அழிதலை முத்தி என்னும் கொள்கையுடைய; இதற்கு அறுசுவை உணவும் உச்சிக்குமுன் புசிக்கிறதே பொருள் என்னும் புத்தர் என்றுரைத்தார் முன் உரைகாரர் ; -(38) எச்சன் ஏழிசையோன் - பராசர முனிவன்; எச்சன் எச்சம் - (யக்ஞம்) எச்சத்தைச் செய்தவன்; ஏழிசை - மிக்க புகழ்; கொச்சை என்றபெயர் போந்தவரலாற்றுக்குறிப்பு. "வழிமொழி" பார்க்க-(39) ஆறுபதம் - பிரத்தி, பிரத்தியாகாரம், துல்லியம், துல்லியாதீதம், வித்தை, அவித்தை என்பன; ஐந்தமர் கல்வி - சிவாகமம்; மகாசதாசிவ மூர்த்தியின் ஈசான முகத்துள்ள ஈசான முதலிய ஐந்து முகங்களினின்றும் சிவபெருமான் சிவாகமங்களை அருளிச் செய்தனர். "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ; லனற்றா டொழாஅ ரெனின்" (குறள்) என்றபடி கல்விப் பயன் சிவனைத் தொழுதலே; ஆதலின் சிவகாமம் கல்வி எனப்பட்டது; "மாவேட்டாகிய வாகமம் வாங்கியும், மற்றவை தம்மை மகேந்திவை ரத்திருந், துற்ற முகங்களாற் பணித்தருளியும்" (திருவா. கீர்த். 18 - 20); அமர் - விரும்புதல்.-(41) மூன்றுகாலம் - இறப்பு - நிகழ்வு - எதிர்வு; மூன்று காலமுதோன்ற நிற்றலாவது - கால தத்துவம், மாயையிற் றோன்றுமாறு தனது சத்தியால் நோக்கி நிற்றல்;-(42) இருமையினொருமை - அத்துவிதக் கலப்பு; சத்தி சிவம் கலந்த அர்த்தநாரீசுர வடிவம் என்றலுமாம். ஒருமை - தனி முதற்பொருள்.-(44) கழுமல முதுபதிக் கவுணியன் - தீக்கைகளால் மலத்தைக் கழுவும் பழமையாகிய சீகாழியிற் கவுணிய கோத்திரத்தில் வந்தவர்.-(45) கழுமலமுது பதிகக்கவுணியன் - கம் என்கின்ற பிரமசிரசிலே உண்கின்றவன்.-(47) நினையவல்லவரில்லை நீணிலந்தே - நினைக்கவல்லார்கள் இந்நிலவுலகத்திற் பிறப்பிலராவர். முடிப்பு : ஓருவாயினை, ஆயினை; நின்றனை; காட்டினை; சூடினை; ஏந்தினை; உரித்தனை; அறுத்தனை; பிரமபுரம் பேணினை; வேணுபுரம் - விரும்பினை; புகலி யமர்ந்தனை; வெங்குரு விளக்கினை; தோணிபுரத் - துறைந்தனை; பூந்தரா யேய்ந்தனை; சிரபுரத் துறைந்தனை; புறவம் புரிந்தனை; சண்பை நின்றனை; கழுமலமுதுபதிக் கவுணியனறியும், அனைய தன்மையை;