தொடக்கம் |
2.22 திருக்குடவாயில் - இந்தளம்
|
|
|
1699. |
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1700. |
ஓடும் நதியும், மதியோடு, உரகம்,
சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல்
கூடும் குழகன் குடவாயில்தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1701. |
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்;
கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1702. |
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா,
நல மென்முலையாள் நகைசெய்ய, நடம்
குலவும் குழகன் குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1703 |
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1704. |
அலை சேர் புனலன்; அனலன்;
அமலன்;
தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1705. |
அறை ஆர் கழலன்; அழலன்; இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட, நடம்
குறையா அழகன் குடவாயில்தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1706. |
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)
வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1707. |
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும்,
தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்;
கொல் நல் படையான் குடவாயில்தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1708. |
வெயிலின் நிலையார், விரி போர்வையினார்,
பயிலும் உரையே பகர் பாவிகள்பால்
குயிலன்; குழகன் குடவாயில்தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1709. |
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே. |
11 |
|
உரை
|
|
|
|