91
 

3. செல்வம் நிலையாமை

213. அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

(ப. இ.) வேந்தர் ஆனை தேர் முதலிய அரச உறுப்புக்களும் பெரும் பொருளும் பிறர் கொள்ளப் போவதன்முன் திருவருளால் தெளிவினை எய்தித் தம் உயிரொடும் சிவனடியைச் சேர்தல் வேண்டும். சேர்ந்தால் அஃது அருளிப் பாடாகிய அருந்தவம் ஆகும். அத் தவப் பேறு எய்தாவிட்டால் பின்பு அவ்வுயிர் மயக்கமெய்திப் பிறப்பினை எய்தும். பின்னை - பினை, பின்; ஐ: சாரியை.

(1)

213. இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.2

(ப. இ.) பொருட் செல்வத்தின் நிலைமை ஒரு படித்தாக இராது. பெரும்பாலும் குறைந்து கொண்டே வந்து முற்றும் இல்லாதாகிவிடும். அதற்கு ஒப்பு, திங்களின் தேய்வுபக்கமாகும். இயங்கும் திங்கள் சிறிது சிறிதாகக் குறைந்து தளர்ச்சியுற்று உவா நாளில் முழு இருட்டாவதைக் காண்கின்றோமன்றோ! அத்தகைய செல்வத்தை நிலையுடையதென்று கூறுதல் வேண்டா. வானவர்க்கும் மற்றும் யாவர்க்கும் முழுமுதல் தலைவனாக விளங்கும் சிவபெருமானை மயக்கம் நீங்கித் தெளிவு எய்தும் பொருட்டுப் பேரன்பால் இடையறாது எண்ணித் தொழுங்கள். அது வற்றாவூற்றாக வேண்டுங் காலத்துப் பொய்யாது பெய்து பெருஞ் செல்வமாக்கும் பெருமழைபோல் திருவடிப் பெருஞ் செல்வத்தை அளிக்கும்.

(அ. சி.) இயக்குறு... செல்வம் - இயங்குகின்ற திங்களின் இருட்பக்கத்தைப் போன்று குறைந்து கொண்டே போகின்ற.

(2)

214. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்3
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

(ப. இ.) நம்முடைய நிழலென்று நாம் மிகுதிபடப் பேசுகின்றோம். அது நமக்கு எந்தக் காலத்தும் எவ்வகை உதவியும் தந்தது இல்லை.


1. மத்தயானை. ஆரூரர், 7. 7 - 1.
2. செல்வ சம்பந்தர், 1. 80 - 5." களித்துக். அப்பர், 4 - 92-7.
3. பிறக்கும். பட்டினத்தார், திரு ஏகம்பமாலை - 7.