பக்கம் எண் :

மனோன்மணீயம்
193

யிருக்கின்றது.

பலவர்ணங்களோடு கூடிய இறக்கைகளுடைய பட்சிக் கூட்டங்கள் தத்த மினங்களோடு சேர்ந்து வட்டமிட்டுக் கொண்டு எங்கெங்குக் குடம்பை கொண்டனவோ அங்கங்கிருந்து முன்னெழுவன முன்னும், பின்னெழுவன பின்னுமாக எழுந்து காலம் வரையறை காட்டுமாபோல ஒத்தறுத் தடித்தல், குற்றமற்ற இசைநூலறிந்தகானமாக்களின் கூட்டம்போல, குற்றமற்ற பாடல்களாகிய பயிர்த்தலை வழங்கலும் இனிதே. அதுவென் - அதோ விரண்டு பட்சிகளும் ஒன்றுக்கொன்று செய்து கொள்வன என்ன! ஆஹா! ஓ! நானறிந்து கொண்டேன்.

மூக்கினால் விம்முகின்ற தங்கள் சிறகுகளை அடிக்கடி தடவுதலால், தங்களுக்கு ஒருவர்மாட் டுண்டா யிருக்கின்ற காதலை ஆணையிட்டுச் சொல்லிக் காட்டுவதுபோல், ஒன்றன் பின்னொன்று சென்று அன்பினை விடாது பாராட்டுகின்ற இந்த இரண்டு பட்சிகளுஞ் செய்து கொண்டிருப்பதென்ன?

1. பரிதி - சூரியன், ஞாயிறு.

3. செவ்விதின் - செம்ைமையாக.

4. ஓவியம் - சித்திரம்; நீவியம் - சிலை. நீவியக்கிழி மீமிசைபோல் ஒருபொருட் பன்மொழி.

5. தீட்டுவான் - தீட்ட, வான் ஈற்று வினையெச்சம்.

6. தூரியம் - சித்திரம் எழுதுகோல்.

8. வணம் - வண்ணம், விதம்.

9. கருகு இருள்மயங்கிய காட்சி கழிந்து - காரிருட் பிழம்பானது மூடிக்கொண்டிருந்த தோற்றமானது போய்.

12. சூட்டு - உச்சிக்கொண்டை.

13. வீம்பு - தெம்பு.

14. அங்காந்து - வாயைத்திறந்து, அங்கா பகுதி.

15. உழை - பக்கம்.

17. இருட்பகை இரவி - இருளுக்குப் பகைவனாகிய ஞாயிறு.

18. காய்வனோ - எறிவனோ, கோபிப்பனோ.

20. மெய்யாந் தம் பெயர் விளம்பி - கா கா என்று கரைந்து.

22. தொழுதி - கூட்டம்.

25. ஒத்தறுத்து - ஓசையிட்டு. அடியா - அடித்து. எஞ்சல் - குறைதல்.

26. இசை - பண். ஈட்டம் - கூட்டம்.

29. ததையும் - செறியும், நெருங்கும்.

33. துகிர் - பவளம்.

33-39. பவளம்போலும் மூக்கினால் சரற்கற்களைச் சிந்திக்கிடக்கிற பழத்தைக் கொத்தினாற் போற்கொத்தி, அப்பக்கமு மிப்பக்கமும் ஒதுங்கி யொதுங்கி வெட்கமில்லாத வெட்கத்தைக் காட்டுகின்ற இப்பட்சியானது அப்பட்சிகளாற் காதலிக்கப்பட்ட பேடு.

ஆடவர் தம் காதலைத் தம் காதல் சென்ற தையலாரிடத்துச் சொல்லியக்கால் அத்தையலார் வஞ்சகமாய்க் கிரகித்துக் கொள்ளுதல் அவர்களுடைய சுபாவமாயிருக்கிறது போலும். (கூடகம் - அறிந்து மறியாததுபோலிருத்தல்)

40-51. துண்டம் - துண்டு, கூடம் - மறைவு.

வாணி? ஏ பெண்ணரசி? உன் நாண்முதலிய நற்குணங்கள் நீடுழி வாழ்க. இவ்விடத்தே ஒருநாள் நானுனைப் பார்த்தபொழுது வாசனையை விடாத கருநெய்தற் புட்பத்தை உன்னுடைய நெருங்கிய கூந்தலில் சூடும்படி கொடுத்தவுடன் நீ அதை மனதுடன் (அன்பாய்) புன்னகையோடு கையில் வாங்கினதும் அம்மலரை மதியாதவள்போல் அங்கே