அயன், அரி, அரன், அசுரர் - தேவர்களுக்கு மாறானவர். சுராபானஞ் செய்யாதவர். 172. பகடி - கேலி. 179. அலால் என்பதற்குப் பதில் அதில் என்றும் பாடம் கொள்ளலாம். 183. திட்டம் செய்வான் - ஏற்பாடு செய்ய. ---------- மூன்றாம் அங்கம் முதற் களம் 1. தனையன் - குமாரன், புதல்வன், தனயை - பெண்பால் 6. ஐயுறல் - சந்தேகப்படாதே, எதிர்மறை ஏவல். 7. பழுது - குற்றம். 10. மதியில் முதியோன் - அறிவில் முதிர்ந்தவன். 15. தொல்மொழி - பழமொழி. 16. மருளும் - மயங்கும் 18. கன்றும் - கோபிக்கும், சினம் - கோபம். 21. திருவும் வெருவும் உருவும் - இலக்குமி தேவியும் பயப்படும் அழகும். 26. செறித்திடும் சிறையினை - அடைக்கும் அடைப்பை அல்லது அணையை. 29. மலைவு - மயக்கம், தியக்கம். 35. தகைத்து - தகுதியை யுடையது. 39. பிறழா - மாறுபடாத. 42. மம்மர் உழன்றவன் - மயக்கத்தில் வருந்தினவன், உழல் - பகுதி. 46. பணி ஆற்றுதும் - தொண்டு செய்வோம். 49. இயம்பல் - சொல்லுதல், அல் ஈற்றுத் தொழிற் பெயர். 53. பரிவுறல் - அன்பு கூர்தல் 61. ஒருபடித்தன்று - ஒருதன்மையதல்ல. 62. உஞற்றுவன் - செய்வன். 64. ஏமாப்பு - இன்பம், ஏமா பகுதி. 76. உன்னான் - நினைக்கான். 81. உரனும் - வலியும் 86. மலையன் - சேரன். 94. நயந்திலன் - விரும்பிலன். 105. வெறுக்கை - செல்வம். 108. துணை - அளவு. தினை, பனை ஈண்டு சிறுமை பெருமையை உணர்த்துவன. 114. அற்றம் - சமயம், காலம். 127. உன்மத்தன் - பைத்தியக்காரன். 134. காண்டி - காண்பாய். 135. செருமுகத்து - போர்க்களத்தில் 138. ஆலவாய் - மதுரை. 141. நிகாதர் - வஞ்சகர். 144. தவில் - கொட்டு. 151. விழுமிய - சிறந்த, விழுமம் - சிறப்பு, உரிச்சொல். 158. ஓர்ந்து - ஆராய்ந்து. 164. கோழையர் - உறுதியற்றவர். 167. விதிர்விதிப்பு - நடுநடுக்கம். 174. வௌவு - களவுசெய். 177. இவ்வடியின் கருத்து ஆங்கிலத்தில் Crocodile tears-முதலைக் கண்ணீர் என்பதோ டொத்தது. அதாவது முதலை தான் கொன்ற மிருக முதலியவற்றைத் தின்னும் போது கண்ணீர் விடுக்கும் என்பது உலக வழக்கு. 180. ஓவாது - இடையறாமல், நீங்காமல்.
|