யால், 'திரிந்துலவுங்காலும்' என்றார். அகோராத்திரம் - இரவு பகல். கால் - காற்று. 39. காசிப முனிவர்க்குப் பரசுராமரால் தானஞ் செய்யப்பட்டமையால், 'காசினி' எனப் பூமிக்கு ஒரு பெயர். யூகம் - ஆலோசனை. உள்ளபடி - உள்ளவளவு. 40. உண்டெனிலோ என்புழி ஓகாரம் கட்டுரைச் சுவைபட வந்த அசைநிலை. இல்லை எனில் என்பதனிடத்தும் அவ்வோகாரம் கூட்டப்பட்டது. கண்டுயிலு மில்லிடம் தீக்கதுவ வெளியோடுங் கணக்கு - என்பதை "நித்திரைசெய் வீட்டில் நெருப்பும் பெரும்படையும், முற்றிப் புறப்பட்டார் முற்றத்தே - பித்தரைப் போல் நில்லென்று சொன்னாலும் நிற்பரோ அப்படிக்காண், இல்லறத்தை நீத்தார் இயல்பு" என்ற ஒழிவி லொடுக்கச் செய்யுளோ டொப்பு நோக்குக. ஒல்லை - விரைவு. தேறி - தெளிந்து. கதுவ - பற்ற. கரந்து - மறைந்து. 41. தன் தலைவரும் அவ்விடங்களில், சென்றிருப்பார் என்ற துணிபால் ஆங்காங்குச் சென்று பார்த்தும் அவரைக் காணாமையால், 'பார்த்துடலஞ் சலித்தேன்' எனவும், அவர் இல்லறந் துறந்த பெரியா ராதலான், குருக்கள் மடத்திற் றங்கி ஞானநூல் ஆராய்ச்சி செய்வார் என்னுங் கருத்தால் அவ்விடத்துச் சென்று பார்த்தும் பயனற்றமையால், 'மடந்திரிந்து மனம் அலுத்தேன்' எனவும், யோக நிலையுடையராதலால் யோகியர்கள் வாழ்கின்ற குகைகளிற் றங்கித் தாமும் வசிப்பரெனக் கருதிப் பார்க்கையில் ஆண்டும் அவர் இல்லாமையால், 'யோகியர் போய்வாழ் குகையும் பாழே' எனவும் கூறினாள் என்க. திருக்கு - அஞ்ஞானம், வஞ்சகம், குருக்கள் - இருளை யொழிப்பவர் எனக் காரணக் குறியாயினும் ஈண்டுத் 'திருக்கறு' என்னும் அடைமொழியால் வாளா பெயராய் நின்றது, 'சேற்றில் முளைத்த பங்கயம்' என்றாற்போல, மன்று - சபை. 42. தன் நாயகனைக் கண்ட துண்டோ என்று மான் முதலியவற்றை விளித்துக் கேட்டாள் என்க. மான் என்றது பெட்டை மானை, கலை என்றது ஆண்மானை. பிடி - பெட்டை யானை, மா - ஆண்யானை. பிகம் - குயில், குயில் தன் முட்டையைக் காகத்தின் குடம்பையுள் இட்டுக் குஞ்சு பொரிக்கும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்து குஞ்சு வெளிப்பட்டவுடன் தன் தாயாகிய காகத்தைவிட்டுப் பிரித்துத் தான் அழைத்துக் கொண்டு செல்கின்றமையால், 'வன்பிகமே' என்றார். அறிவீரோ என்புழி ஓகாரம் வினாப்பொருளது. தொடர்ந்து என்னும் எச்சம் கழித்தேன் என்னும் முற்றோடு முடிந்தது. அஞ்ஞான மயக்கம் விடாத அறுபத்து நான்கு கலை ஞானங்களே!பிடிவாதமே வாழ்க்கையாகக் கொண்ட மதச் சச்சரவுகளாலெழும் ஆரவாரமே! அனிர்த சடதுக்க ரூபமாகிய இஹலோகமே!சுகம் சுகம் என்று கூறப்படும் இந்திராதி பதமோட்சங்களாகிய பரலோகமே!என்னும் தத்துவார்த்தம் ஒருவாறு தொனித்தல் காண்க. 43. கண்டிலன் - எதிர்மறைத்தன்மை வினைமுற்று. ஏ-அசைநிலை. நண்ண உண்ண என்பன அகரவீற்று வியங்கோள் வினைமுற்றுக்கள். அருவருப்பு - வெறுப்பு, தொழிற்பெயர். காயம் - உடல். 44. பலவிடத்துத் தேடியும் தலைவரைக் காணாமையால், 'அலைந்த தத்தனையும் பொய்யோ' என்றார். எனக்கும் என்பதிலுள்ள உம்மை இழிவு சிறப்பு. அவர் தந்த போதமாவது
|