105

இ-ள் : ‘கருவி வானம்’ (புறம். 159)  எனவும், ‘கமஞ்சூல்  மாமழை’
(அகம்.  43)  எனவும்,  கருவியும் கமமும், தொகுதியும்  நிறைவுமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

கருவி வானம்  என்புழிக் கருவிமின்னு  முழக்கு  முதலாய  வற்றது
தொகுதி.

தெய்.

இ-ள் : கமம் என்னுஞ்சொல் நிறைந்து என்பதனோடு இயலும், எ-று.

உ-ம் : ‘கமஞ்சூல் மாமழை’                      (அகம். 43)

நச்.

இதுவுமது.

இ-ள் : கமம்     நிறைந்து   இயலும்   கமம்      நிறைவாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

சொல்லொடு  பொருட்கு  ஒற்றுமை கருதி  ‘நிறைந்தியலும்’  எனப்
பொருளின் தொழிலைச் சொல் மேல் ஏற்றினார்.

உ-ம் :1‘கார்கோள்  முகந்த  மஞ்சூல்  மாமழை’ (திருமுருகு.  7)
எனவரும்.

வெள்

(கருவி தொகுதி, கமம் நிறைந்தியலும்)

இ-ள் :  கருவி    என்னும்   உரிச்சொல்   தொகுதி    என்னும்
குறிப்புணர்த்தும். கமம் என்பது நிறைவாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம்  :  ‘கருவி  வானம்’ எனவும்,  ‘கமஞ்சூல் மாமழை’ எனவும்
வரும்.  மின்  இடி  முதலாயவற்றின்  தொகுதியாகிய  மேகம் என்பார்
‘கருவி வானம்’ என்றார்.

ஆதி.

பொருள் :கமம்-நிறைவுற்ற.

அரி
  

350.

அரியே யைம்மை                             (59)

(அரியே ஐம்மை)
 

ஆ. மொ. இல.

‘Ari’ is beauty


பொருள் :  1. கடலில் முகந்ததனால் நிறைந்த  சூலுடைய பெரிய
                மேகம்.