ஆ. மொ. இல. The poets say that ‘tuvaiththal’ ‘silaiththal’. ‘iyambal’ and ‘irangal’ are words, which denote noise. ஆல். Scholars tell us that ‘thvaittal’ cilaittal, ‘iyampal’ and ‘irankal’ mean what these sounds suggest. பி. இ. நூ. இல. வி. 2852 துவைத்தல் சிலைத்தல் இயம்பல் இசைசுட்டலும் இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை நான்கும் இசை பற்றி வந்தன. வ-று : 1‘வரிவளை துவைப்ப’ என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம். 2‘கலையி னிரலை சிலைப்ப’ என்றக்கால், அதனது குரலிசைப்பைச் சொல்லிற்றாம். ‘ஏறு சிலைக்கும்’ என்பதும் அது.
பொருள் : 1. வரிகளையுடைய சங்கு ஒலிப்ப. 2. கலைமானொடு இரலைமான் ஒலிப்ப. |