பல்லாயிரம் ஆண்டுகள் போர் நடந்தது. முடிவில் மது, கைடவர் திருமாலைப் பார்த்து, ''உனது ஆற்றலுக்கு மகிழ்ச்சி; வேண்டும் வரம் கேள்'' எனக் கூற, ''உங்களைக் கொல்லும் வரம் தருக'' எனக் கூறினார். அவர்களும் கொடுத்தனர். திருமாலும் அவர்களைப் பார்த்து 'நீங்கள் வரம் ஒன்று கேட்க' என்றார். 'ஒருவரும் இறவாத இடத்தில் நாங்கள் இறக்கவேண்டும்' என வேண்டினர். திருமாலும் அவ்வாறே ஆகுக என்று சொல்லி, தன் தொடையினால் நெருக்கிக் கொன்றார் என்பது வரலாறு. |
கார்த்த வீரியன், கிருத வீரியன் என்பான் மகன்; சிறந்த ஆற்றல் உடையவன். இராவணன் திக் விஜயம் செய்த போது, கார்த்தவீரியனது தலை நகரமாகிய மாகிஷ்மதி நகர்க்குச் சென்றான். கார்த்தவீரியன் அப்போது அங்கு இல்லை. நருமதை நதியில் தன் மனைவியோடு நீராடிக் கொண்டிருந்தான். கேள்வியுற்ற இராவணன் அவனை நோக்கி அங்குச் சென்றான். அதற்குள் பூசை வேளை நேரிட்டதால், நருமதை யாற்றங்கரையில் மணலால் லிங்கம் செய்து பூசை செய்தான். இப்போது கார்த்த வீரியனும் அவனது மனைவியாரும் நீர் விளையாடினராதலால் அவர்களால் நீர் சிதறப்பட்டு மணலாலான லிங்கத்தைப் பாழ்படுத்தியது. வெகுண்ட இராவணன் கார்த்த வீரியன் மீது போர் தொடுத்தான். கார்த்தவீரியன் தனது ஆயிரங்கைகளால் இராவணனது இருபது கைகளைப் பற்றி ஒன்றும் செய்ய இயலாமற் செய்து, துன்புறுத்தி, சிறையில் அடைத்தனன். இராவணன் சிறையில அடைபட்டதனை அறிந்த அவன் பாட்டனான புலத்திய முனிவன், கார்த்தவீரியனிடம் வேண்டி, ''இராவணஜித்'' என்ற பெயரைக் கார்த்தவீரியனுக்கு நல்கி |