பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்795

மயிந்தன்:

தேவ வைத்தியர் இரட்டையரான அசுவினி
தேவர்களின்அமிசத்தில் பிறந்த இருவரில்
ஒருவன்.

மருத்தன்:

மாயாசனகனாக சீதை முன் தோன்றியவன்.

மனு:

சூரியனின் மகன். இராமன் வமிசத்துக்கு
ஆதிமுதல்வன்.

மாதலி:

இந்திரன் கட்டளைப்படி தேவர்கள்
அனுப்பிய தேரைப் போர்க்களத்தில்
இராமனுக்கு ஓட்டியவன்.

மாண்டவி:

பரதன் மனைவி. சனகன் தம்பி மகள்.

மாந்தாதா:

சூரியகுல முன்னோன்.

மாபெரும் பக்கன்:

மகாபார்சுவன். இராவணன் படைத்தலைவன்.

மாயாவி:

வாலியின் குலப்பகைவன்.

மாரீசன்:

தாடகையின் மைந்தன். பொன்மானாய்
வந்தவன்.

மாருதி:

அநுமன்.

மாலி:

1. பழைய அரக்கர் தலைவர்களுள் ஒருவன்.
2. அசுரன்; இலக்குவனால் அழிந்தவன்.

மாலியவான்:

இராவணனின் தாயைப் பெற்றவன்.

முரபன்:

வானரப் படைத்தலைவன்.

முரன்:

நரகாசுரன் அமைச்சன். கண்ணனால்
கொல்லப்பட்டவன்.

மேகநாதன்:

இந்திரசித். இராவணன் மகன்.

மேனகை:

தேவநங்கை. இராவணன் ஆட்சியில்
குற்றேவல் புரிந்தவள்.

யூயாட்சன்:

பஞ்சசேனாபதிகளுள் ஒருவன்.

லோகசாரங்க முனிவர்:

சம்பாதி உயிர் துறக்க முற்படுகையில்
காப்பாற்றியவர்.

வச்சிரத்து எயிற்றன்:

வஜ்ஜிரதந்தன். அரக்கர் படைத்தலைவன்.

வச்சிரமுட்டி:

வஜ்ஜிரமுஷ்டி. சுக்கிரீவனால் கொல்லப்பட்ட
அரக்கன்.

வசிட்டர்:

தசரதன் குலகுரு.

வசு:

குசனுடைய மைந்தன்.

வயமத்தன் :

வயமஸ்தன். இராவணன் படைவீரன்.
இடபனால் அழிந்தவன்.