பக்கம் எண் :

1303
 

ஒன்பதாந் தந்திரம்

இது பேற்றுறுதியாற் பெறப்படும் பெரும்பயன் வகுத்தருள்கின்றது. இது நானூறு திருப்பாட்டுக்களைக்கொண்டது. குருமட தரிசனம் முதல் சர்வவியாபி ஈறாக இருபத்திரண்டு பகுப்புக்களையுடையது. இவ் வொன்பதாம் தந்திரம் ஒருபுடையொப்பாக அணைந்தோரியல்பு அருளுகின்றது எனலாம். சித்தாந்த சைவர் இருந்துவாழ் உறையுளே 'மடம்' என அழைக்கப்படும். இவ்வுண்மை வரும் சேக்கிழாரடிகள் திருமொழியான் உணரலாம்:

"மிக்க செல்வ மனைகடொறும் விளையும் இன்பம் விளங்குவன
பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க வணிகொள் மடங்கடொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொ ளிடங்கடொறும் அடங்க நிதியம் துவன்றுவன."

(12. சேரமான் பெருமாள், 3.)

ஞானசம்பந்தப் பெருமானார் தங்குந் திரு இடம் மடம் எனப்படும். அந்நிலைமை சேக்கிழாரடிகள் அருளிய திருத்தொண்டர் புராணத்துத் திருஞானசம்பந்தர் திருவரலாற்றில், இருநூற்று அறுபத்திரண்டாம் திருப்பாட்டில் 'மடத்துப் புக்கார் எனவும், எண்ணூற்று ஐம்பத்துநான்காம் திருப்பாட்டில் 'சைவர் இருந்துவாழ் மடம்' எனவும் ஓதியருளப் பெற்றமையான் வலியுறுத்தப்பெறும். அக் குரு மடக்காட்சி சிவனடியணைந்த நற்றவத்தோர் அனைவர்கட்கும் என்றும் வேண்டப்படுவதாகும். எட்டாந் தந்திரம் எட்டாந் திருமுறை ஆசிரியராகிய ஆளுடைய அடிகளாருடன் ஒருபுடையொப்பாம் என்பது அவர்கண்ட பெருந்துறையே ஈணடுக் கூறப்படுவதுபோல் பெருந்துறை (2603) என்னும் திருப்பெயர் அமைந்துள்ளது பெரிதும் நினைவு கூர்தற்பாலதாகும். குருமடங்கண்டார் குருவினைக்காண்பர். அக் குருவினை நெஞ்சகம் பூண்பர். பூண்பதால் திரிமலம் அறும். அறவே அவர் (2511) சிவனிலை எய்துவர். ஓங்காரத்தின் உண்மையும் உணர்வர். சிவஒளியின் செம்மையும் (2646) தேறுவர். தேறவே அவ்வருள் ஒளியின் துணையால் 'நமசிவய' (2649) என்னும் பரியதிருவைந்தெழுத்துணர்வர். அதன் வாயிலாகச் 'சிவயநம' (2659) என்னும் நுண்ணிய திருவைந்தெழுத்தெண்ணுவர். இவ்வெண்ண முதிர்ச்சியால் 'சிவயசிவ' (2669) என்னும் மீ நுண்மைத் திருவைந்தெழுத்தினை மேற்கொள்வர். இதனை மேற்கொண்டார் திருவைந்தெழுத்தால் பெறப்படும் அம்பலவாணர் திருவுருவும், அத் திருவுருவின்கண் காணப்படும். அடையாளங்களும், ஐந்தொழில் அருட்கூத்துங் கண்டு அகமிக மகிழ்வர். அத்திருக்கூத்துச் சிவ இன்பம், சிவவனப்பு, பொற்பதி, பொற்றில்லை, வியப்பு, என ஐவகை