பக்கம் எண் :

1304
 

வெவ்வேறு சிறந்த செவ்வித் திருப்பெயரும் பெறும். இப்போற்றால் திருவருள் வெளியாம் ஆகாசப்பேறு (2767) பெறுவர். திருவருள் வெளிப்பேறு பெறவே திருவடியுணர்வு (2779) திகழ்ந்தெழும். திகழ்ந் தெழவே உண்மை அறிவு இன்ப ஒண்மை (2784) எண்மையினை எய்தும். எய்தவே திருவருளுருவினைக் குருவழியாக (2796)க் கூடுவர். கூடியவர் உடலூழாய்க் கழியும் ஊழால் (2803) தந்தன்மை குன்றார். குன்றாராகவே சார்புச் சிவக்காட்சியினைச் சிந்தையினுள்ளே (2809) தெளியக் காண்பர். அங்ஙனங் கண்டார் உண்மைச் சிவக்காட்சியினை (2819) வண்மையுடனே உணர்வர். இவ்வுணர்வுடையார் முழுப்பொருள் கண்ட விழுப்பேற்றின (2823) ராவர். அப் பேற்றினர் உண்மைப் பொருட்களை மறைபொருட் கூற்றாக (2845) வழுத்தி வழங்குவர். மறைபொருள்: வெளிப்படப் பொருள் தோன்றாது மறைந்துநிற்றல். இம்முறை சித்தர் கையாளும் சீரியமுறையாகும். இதனானும் இந்நூல் தொல்காப்பிய முனிவரனார் காலத்துக்கு மிகமுற்பட்டதாகலாம் மறைபொருட் கூற்றுணர்ந்தார் ஒன்றிநின் (2913) றுணரும் மேன்ஞானம் எனப்படும் மோனநிட்டையெய்துவர். அந்நிட்டையினர் சிவனடிமையாம் சிறப்பெய்தி வரைவுற்ற உரைமாட்சி மாற்றங்கழிந்த மாண்பாம் என்பது உரையற்ற (2915) தென்றதானல் விளங்கும். அங்ஙனம் அணைந்தோர் அழுந்தும் இன்பம் அடைதற்குரியது (2922) அறிதற்கரியது. அணைந்தோர் அவன்றன் பொருள்சேர் புகழையே இருள்சேர் இருவினை நீங்க இடையறாது ஏத்திப் (2980) புகழ்வர். அவன் எங்கும் நீக்கமறநின்று தங்கும் பொங்கிய இயற்கை உண்மை அறிவின்பச் செம் பொருள் 'சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்,' அவன் எங்கும் என்று முளன் என்னுமுண்மை (2990) நன்கு புலனாகும்.

ஒப்பிலா ஒன்று

நம் தென்தமிழ்நாடே தொன்மை நன்னாடாகும். உலக முழுமைக்கும் மொழிவளத்தால் கடவுட்கொள்கையால் நாகரிகப் பண்பாட்டால் நலம் பல அளித்து அன்றும் இன்றும் என்றும் தலைசிறந்து நிற்பது நம் பொன்னாடாகிய தமிழ்நாடே. சிவனெறியும் செந்தமிழும் உயிரும் செயிர்தீர் உடம்பும்போல் பிரிவின்றி இயைந்தியங்குவன. அவை, மாற்றரும் வேற்றுமை அகற்றி ஆற்றரும் ஒற்றுமைதேற்றிப் போற்றி யொழுகச் செய்யும் பொற்பின.

இதன்கண் ஒப்பிலா ஒரு நூல் எனப் போற்றிப் பயிலத்தக்கது நம்பிரான்மூலர் நவின்றருளிய திருமந்திரமாலை யென்னும் தமிழ் மூவாயிரமாகும். இதன்கண் ஒன்பது தந்திரங்களும், நூற்றுத் தொண்ணூற்றைந்து உட்பிரிவுகளும் காணப்படும் முறைமைகளை மேலே ஒருசிறிது விரித்து விளக்கினாம். இதன்கண் காணப்படும் யோக