பக்கம் எண் :

1305
 

முறைகளும், சக்கரமுறைகளும், பொறியடையாளங்களும் நன்கு பயின்றோர் வாயிலாகத்தெளிவு பெறுவது சிறப்பு. அதன்பொருட்டு இந்நூல் முழுவதுமே கற்றற்கும்., தெளிவுபெறுதற்கும், கைக்கொண்டுற்று ஒழுகுதற்கும் அரியதென்று கருதுதல் நன்றாகாது. ஏனைப்பாடல்கள் எளிமையும் இனிமையும் இயல்பாகவே அமைந்து செம்பாகமாகப் பொருள் விளங்குவன. அரிதுணர் பொருளவாய் ஆசான் வாயிலாகப் பொருள் விளங்க வேண்டுவனவாயுள்ள பாடல்கள் பத்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே காணப்படுகின்றன. இந் நூலால் தமிழுலகம் உறுதிப்பாடாக மேற்கொள்ளவேண்டிய ஓர் அழியாவுண்மை நன்கு புலனாகும். அஃதாவது, ஆரியமொழியே ஆண்டவன் வழிபாட்டிற்குச் சீரியதென்னும் பொருந்தாக் கொள்கையினை இருந்திடம் சுவடறியாவாறு அகற்றவது. மேலும் வேதாகமங்கள் ஆரியமொழியிலேயேதான் இருத்தல்வேண்டும். ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்தல் ஏற்புடையதன்று என எண்ணா துரைக்கும் நண்ணார்மொழியினை நாட்டிலும் ஏட்டிலும் ஒருசிறிதும் இடம்பெறாவாறு ஓட்டுவது. அம்மட்டோ? இஃதொரு நூலுமே இருக்கிற திருவருள் நூல்களில் தொன்மை வாய்ந்த செந்தமிழ் வேதாகமச் செழுநூலென உளங்கொளக்கொண்டு வளம்பெற வாழ்வது விரிவஞ்சி இத்துடன் நிறுத்துதும்.

பொதுமுறையாக இன்றியமையாச் சில பல ஈண்டுக் காட்டுதும். அதுகொண்டு ஏனையவற்றை விரித்துக் காணுமாறு செந்தமிழன்பர்களையும், செந்நெறிச் செல்வர்களையும். சிவனுணர்தவத்தரையும் பன்முறையும் பணிந்துவேண்டுதும். அவை வருமாறு: ஆரியர்கள் அன்றுதொட்டு இன்றுகாறும் மடிதற்று நின்று பறையறைந்தாற் போன்று பகர்வது பல கடவுள். பல இனம், பலநிலை. அவற்றிற்கு முற்றுமாறாகச் செந்தமிழ்வாணர் சீரிதின் மொழிவது ஒன்றே கடவுகளும், ஒன்றே இனமும்., ஒன்றே நிலையும் என்பதாம். அவ்வுண்மை 'ஒன்றே குலமும்' (2066) என்னும் திருப்பாட்டாற் பெறப்படும். அவ்வொன்றும் விழுமிய முழுமுதற் சிவபெருமானே என்பது 'சிவனொடொக்கும்' (4) என்பதனால் விளங்கும். அவனைச் செந்தமிழ்த் திருமாமறை வழியாக வழிபடுமாறு காட்டியருடள் பவன் சிவகுருவாவன். அது 'சிவனை வழிபட்டார்' (2080) என்பதனால் விளங்கும்.

அவனை வழிபடுவது செந்தமிழினாலேயேதான் என்பதும், அதுவே 'மாதவம் செய்த தென்றிசை'ப் பிறந்தார் பெறும்பயன் என்பதும், சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்புமாம் என்பதும் 'பின்னை நின்' (152) றென்னும் திருப்பாட்டான் விளங்கும். இதன்கண் 'தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு' என்பது, சிவபெருமானைச் செந்தமிழ்த் திருமாமறை ஓதி