பக்கம் எண் :

1306
 

அனைவர்களையும் பொருள் புரிந்து விரும்பி மகிழ்ந்து வழிபடுமாறு செய்து தாமும் தவறாது வழிபடுவதென்பதாம். அச் சிவபொருமான் ஏனையோர் கூறும் கடவுளர் போன்று பிறப்பு இறப்பிற் குட்பட்ட வரல்லர் என்பதும், பிறப்புக் கடவுளரால் சிறப்போடு வழிபடப் பெறுபவர் என்பதும், 'பிறப்பிலி' (148) என் திருப்பாட்டான் விளங்கும். முப்பொருள் உண்மை சாற்றும் முத்தமிழ் வேதம் சதாசிவக் கடவுள் திருவருள் பெற்ற மெய்யுணர் தவத்தோரால் வெளிப்போந்தது. அவ்வுண்மை 'சதாசிவம்' (149) என்பதானல் விளங்கும். அச் சிவபெருமான் அமரும் திருக்கோவில் அடியார் திருவுள்ளம். அஃது 'உள்ளம்' (1792) என்னும் திருப்பாட்டான் விளங்கும். சிவ வழிபாட்டில் நம்முடையதென நம்மால் ஒப்புவிக்கத் தக்கது செந்தமிழ்த் திருமுறைத் திருப்பாட்டொன்றுமேயாம். அது 'வேட்டவி' (1793) என்பதனால் விளங்கும். சிவபெருமானைச் சிவலிங்கத்து வழிபடுவது 'பான்மொழி' (1794) என்பதானல் விளங்கும். வழிபாட்டிற்கு இன்றியமையாது வேண்டத்தக்கன ஐந்தமிழ்தும், பதினாறு முகமனுமாம் என்பது 'மஞ்சன' (1796) என்பதனால் விளங்கும். முகமன் - உபசாரம், சிவ புண்ணியம் செய்வார்க்குப் பூவும் புனலும் எளிமையும் இனிமையும் சிறப்பு முள்ளன என்பது 'புண்ணியம்' (1797) என்பதனால் விளங்கும். திருக்கோவிலின் சிறந்த அமைப்பே முப்பொருள் உண்மை செப்பும் என்றும் பொன்றாது நின்று நிலவும் ஓவிய நூல் என்பது 'ஆயபதிதான்' (2372) என்பதனால் விளங்கும். முப்பொருள் தொன்மையே உள்ளன என்பது 'அறிவறி (2366) என்பதானல் விளங்கும். பிரமன் முதலிய அனைத்து நிலையினரும் ஆருயிர் இனங்களே யாம் என்பது பசுப்பல' (2367) என்பதனால் விளங்கும். படைப்பு, முதலிய அருட்டொழில்கள் ஆருயிர்களின் நன்மைக்காகவே ஆண்டவன் அவ்வுயிர்களுடன் புணர்ப்பாய் நின்று புரிகின்றனன். அது 'படைப்பு' (2379) என்பதனால் விளங்கும்.

எல்லா மறையினும் முந்தியதும், சிறந்ததும், பொருள் உண்மைப் பொற்பதும் ஒருங்கு வாய்ந்து செந்தமிழ்த் திருவைந்தெழுத்தே. அஃது 'ஒன்று கண்டீர்' (2922) என்பதானல் விளங்கும். ஆருயிர் பேருயிராகிய சிவனாதற்கு அச் சிவபெருமான் வைத்துள்ள குளிகை 'சிவயநம'. அஃது 'எளிய' (2659) என்பதனால் விளங்கும். திருவைந்தெழுத்துத் தனித்தனிப் பொருளுணர்த்தும் ஐந்து சொற்களின் முதலெமுத்து. அது 'சிவனரு' (2661) என்பதனால் விளங்கும். அவ் வைம்பெரும் சொல்லும் வருமாறு: சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்பன. 'சிவசிவ' (2667) என்னும் செந்தமிழ்த் திருமாமறை எப்பொருளும் தெளிக்கும் செப்பரிய ஒப்பறு மந்திரம். இத் திருப்பாட்டில்