'சிவசிவ' என்பது ஒன்பதுமுறை வருகின்றது. அதனால் இத் திருப்பாட்டைப் பன்னிரண்டு முறை அன்புடன் ஓதினால் இன்பருளும் சிவவுரு நூற்றெட்டுக் கண்ணியதாகும். சிவயசிவ என்பதன் மேனிலையே 'சிவசிவ' என்பதாகும். அது 'சிவாய' (2669) என்பதானல் விளங்கும். அச் சிவபொருமானைத் திருமுறைப் போற்றித் தொடர்புகன்றே வழிபடுதல் வேண்டும். அது 'போற்றி என்பார்' (44) என்பதனால் விளங்கும் 'முன்னவனார் கோவில் பூசைகள்' செந்தமிழால் முட்டின்றி நடைபெறுதல் வேண்டுமென்பது 'முன்னவனார்' (501) என்னும் திருப்பாட்டான் விளங்கும். அப் பூசையினைப் 'பேர்கொண்ட பார்ப்பான்' தன் ஆரிய மறையினால் செய்வது போக்கலாகாப் புரை தருவதாகும். அதனால் அவன் பூசை செய்வது அடாது அது 'பேர்கொண்ட' என்னும் (502) திருப்பாட்டான் உணரலாம். புரை: கருதிய நன்மை யொழியக் கருதாத தீமைபயத்தல். அவ் வாரியப் பார்ப்பனர்க்கு ஈயும் அகரமாகிய குடியிருப்பினால் நாட்டுக்கோ மொழிக்கோ நன்னெறிக்கோ ஏதும் நலமின்று; சிவஞானிக் கீவதே சிறப்புடையதென்பதாம். அஃது 'அகர' (1824)ம் என்பதனால் விளங்கும். நாயனார் இதன்கண் விளக்கியருள எடுத்துக் கொண்ட அரும் பெரும் பொருள்கள் எட்டென்ப. அவ் வெட்டும் முறையே அறியப்படும் பொருள், அறிவு, அறிவோன், உடல்மெய், உணர்வுமெய், உணர்த்துமெய், வனப்பாற்றல், சிவன் என்ப. இவ்வுண்மை 'ஞேயத்தை' (154) என்னும் திருப்பாட்டானுணரலாம். 'தன்னை' (1406) என்னும் திருப்பாட்டும் இதனுடன் ஒத்துக் காண்க. விழுமிய முழுமுதற் சிவபெருமானை எதிர்மறைமுகத்தான் வலியுறுத்தருளிய திருப்பாட்டு 'உருவிலி' (2900) என்பதாகும். இத் திருப்பாட்டினை அடி யொற்றியதே சிவஞான சித்தியாரிற் காணப்படும் 'சிவனருவுருவுமல்லன்' என்னும் திருப்பாட்டு. இத்தகையோரே 'சைவசித்தாந்தர்' என விளக்குவது 'கற்பன' (1396) எனத் தொடங்கும் திருப்பாட்டு; இதனை அடி யொற்றியது சிவஞான சித்தியாரின் 'புறச் சமய நெறி நின்றும்' என்னும் திருப்பாட்டு. சித்தாந்தச் செந்நெறி நிற்போர் அடிச்சார்ந்தார் ஆவர். இவரையே சீவன் முத்தரென்பர். சித்தாந்தம் ஒன்றுமே சிவனைக் காட்டும் சீருடையது. இவ்வுண்மை 'சித்தாந்தத்' (2355) தே என்னும் திருப்பாட்டான் விளங்கும். சைவம் சிவத் தொடர்புடையது என்பது 'சைவஞ் சிவனுடன்' (1486) என்னும் திருப்பாட்டாணுணரலாம். அருஞ் சைவர்மெய் முப்பத்தாறென்பதும். மெய்யாகிய தத்துவக் கொள்கையினை வைத்தே குறிக்கோளாம் சமயங்கள் வகுக்கப்பட்டன என்பதும். அவை சித்தாந்தம், வேதாந்தம், வைணவம், மாயாவாதம் என நான்கே என்பதும் 'ஆகின்ற' (2139)
|