பக்கம் எண் :

671
 

விளங்கும். இன்பத்தோற்ற வூற்றாய் எழுவதும் சத்திசிவமாகும். எல்லா மெய்களும் சத்திசிவம் இரண்டின் கலப்பியக்கத்தால் இயங்குவன. மெய் - தத்துவம். அதனால் தத்துவம் எல்லாம் சதாசிவன் என்று அழைக்கப்படும்.

(9)

1709. கூறுமி னூறு சதாசிவன் எம்மிறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர்1 தம்மொடு
மாறுசெய் வானென் மனம்புகுந் தானே2

(ப. இ.) அருளோன் எனப்படும் சதாசிவனே நம் முழுமுதற் கடவுளாவன். அவன் திருவடியிணையினைப் போற்றித் தொடர்ப்பதிகம் ஐந்தோ டொன்றும் புகன்று, தம் கைகளான் மலர்தூவி அளவின்றி வழிபடுங்கள். நூறு - அளவின்மை. செந்தமிழ்த் திருமறை திருமுறைகட்கு முரணாக நூல்களைச் செய்து மருளால் உலகுக்கும் தமக்கும் கேடுசூழும் அந் நூற்சொற்கள் குற்றமுடையனவாகும். வானவர்கோன் அயன் மால் உள்ளிட்ட தேவர்கள் மயக்கத்தால் தம்மைத் தாமே உய்ர்த்திச்செருக்குற்றுச் சொல்லும் சொற்கள் ஏற்றுரை எனப்படும். அங்ஙனம் சொல்லித் தீரிவதே தொழிலாகவுள்ள அத் தேவர்களுக்குச் சிவபெருமான் மறைந்து மாறுபட்டு நிற்பன். அத்தகையோன் அடியேன் உள்ளம் புகுந்து ஆண்டனன். அருச்சனை நூற்றெட்டு ஆயிரத்தெட்டு என்பதை அப்பரடிகளின் 'போற்றிசைத்துன்' என்னும் திருப்பாட்டு ஒருவகையாகக் குறிக்கின்றது. 'எண்ணாயிர நூறு', எண் + ஆயிரம்; எண் + நூறு; எட்டுடன் கூடிய ஆயிரம், நூறு எனக் கொள்க.

(அ. சி.) கூறுமின் நூறு- 108 நாமங்களால் துதியுங்கள். (108க்கு 100 என்றும், 1008க்கு 1000 என்றும் கூறுவது மரபு). வேறோர் உரை. தமிழ் வேதத்துக்கு மாறான உரை. மிகைப்பொருள் - குற்றமுள்ள பொருள். ஏறுரை செய்தொழில் - தம்மை மேம்பட உரைக்கும். வானவர் தம்மொடு - தேவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆரியர் தம்மொடு. மாறு செய்தான்- விரோதப்பட்டிருப்பவன்.

(10)

1710. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவுஞ்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே.

(ப. இ.) தேவர்கள் சிவனை மறந்து அமிழ்தெடுக்க முனைந்தனர். அம் மறந்ததாகிய உய்தியில் பாவம் நஞ்சாக வெளிப்பட்டது. அவர்கள் அஞ்சிச் சிவனிடம் முறையிட்டனர். அவன் அக் குற்றத்தினை மன்னித்து அந் நஞ்சினைக் கண்டத்தில் இருத்தினன். அதனால் இருளார்ந்த கண்டமாயது. இயற்கையுணர்வுள்ளவன் சிவனே என்பது பற்றுக் கோடின்றித் தீயாகிய மழுவினைத் திருக்கையில் அவன் ஏந்தியிருப்பதால் விளங்கும். அதன் பேர்ஒளி எப்புறமும் காணப்படுதலால் அஃது அவன்றன் முற்றுணர்வினைக் குறிக்கும். மாலையில் தாங்குருவேபோலும்


1. வாழ்த்துவதும். 8. அறிவுறுத்தல், 16.

2. போற்றிசைத்துன். அப்பர், 6. 57 - 10.