பக்கம் எண் :

670
 

(ப. இ.) சதாசிவக் கடவுளுக்கு ஓதபபெறும் திருமுகங்கள் ஐந்து. அவ்வைந்து முகங்களும் முறையே உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் புலன்கள் ஐந்தும் நோக்கி விளங்குகின்றன. புலன்கள் - திசைகள். இவ் வைந்து திருமுகங்களின் வண்ணங்கள் முறையே வருமாறு: உச்சி முகம் பளிங்குநிறம். கிழக்கு முகம் குங்குமம். தெற்கு முகம் நீலவரணம். வடக்கு முகம் செல்வரத்தமாகும். மேற்கு முகம் பால் நிறமாகும். இத் திருமுகங்கள் ஐந்தும் அடியேற்கு அருளுதற் பொருட்டுக் கொண்டனவாகும். இவ் வைந்து திருமுகங்களும் 'சிவயநம' என்றலும் ஒன்று.

(அ. சி.) இம் மந்திரம் சதாசிவத்தின் முகங்களின் வரிசைக் கிரமத்தையும், நிறங்களையும் கூறுகிறது. ஈசானம் - நடு. தற்புருடம் - கிழக்கு. அகோரம் - தெற்கு. வாமதேவம் - வடக்கு. சத்தியோசாதம் - மேற்கு. ஈசானம் - படிக நிறம். தற்புருடம் மஞ்சள் குங்கும நிறம். அகோரம் - அஞ்சன (கறுப்பு) நிறம். வாமதேவம் - சிவப்பு நிறம். சத்தியோசாதம் - பால் நிறம்.

(6)

1706. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

(ப. இ.) ஐந்து திருமுகங்களும், பதினைந்து திருக்கண்களும், பத்துத் திருக்கைகளும், பத்துத் திருப்படைகளும் கொண்டு திகழ்கின்ற நம்பியாகிய சதாசிவக் கடவுள் அடியேன் நெஞ்சுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்.

(7)

1707. சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவம் அருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவதத் துவமுப்பத் தாறே.

(ப. இ.) அருளோன் நிலமண்டிலம் சத்தியாகவும், வான்மண்டிலம் சதாசிவமாகவும் விளங்கி வீற்றிருந்தருள்வன். சத்திசிவமாம் இருவரும் நிலைத்திணை, இயக்குதிணை ஆகிய இரண்டன்கண்ணும் இயைந்து இயக்குவர். சத்தி உருவம், சதாசிவம் அருவுருவம். நிலமுதல் சத்திசிவம் ஈறாகத் தத்துவம் முப்பத்தாறாகும். இம் முப்பத்தாறு மெய்களும் அருஞ்சைவர்கட்குரிய பொருண்மையாகும்.

(8)

1708. தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதயந்
தத்துவம் எல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவன் தானே.

(ப. இ.) சத்திசிவ மெய்கள் உருவமும உள்ளுறை அருவமும் ஆகத திகழும் இயங்குதிணை நிலைத்திணை உலகங்கள் முற்றும் விரிந்து