| நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம் புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே. | | 52 |
கலிக்கம்ப நாயனார் | 1145. | பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான் சைவத் திருவுரு வாய்வரத் தானவன் தாள்கழுவ வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. | | 53 |
கலிய நாயனார் | 1146. | கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன் உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடலிலனாய்க் கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றுங்கொள் கூலியினால் நம்பற் கெரித்த கலியொற்றி மாநகர்ச் சக்கிரியே. | | 54 |
கிடைக்குமாயின் அந்த மீனை, 'இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்' என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார். இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது. அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் வில் பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார், உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார். இந் நாயனார் பத்தருட் சிறந்த 'அதிபத்தர்' எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று. அமர் - அந்த மீன் வாழ்கின்ற. புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர். நாகை - நாகப் பட்டினம். 1145. குறிப்புரை: தன் அடியான் - தனக்கு அடிமையாய்த் தனக்குப் பணி செய்து இருந்தவன். சைவம் - சிவ வேடம். 'கடிந்து, ஆட்பட்டு, கழுவ, நீர் வாரா மனைவி கையைத் தடிந்தவன் கலிக்கம்பன்' என இயைத்து முடிக்க. 1146. குறிப்புரை: கம்பக் கரி - எப்பொழுதும் அசைந்து கொண்டேயிருக்கும் யானை. சிவபெருமான் யானைக்கும், சிலந்திக்கும் அருள் புரிந்தது திருவானைக்காத் தலத்தில். 'கண்ணுதலோன் ஆகிய நாதற்கு' என்க. உடல் - பொன்; காசு. தயிலம் - எண்ணெய். சக்கிரி - செக்கான்; செக்காடும் தொழிலை உடையவன். சக்கிரம் - செக்கு.
|