பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை808

சத்தி நாயனார்

1147.கிரிவில் லவர்தம் மடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.

55

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

1148.சத்தித் தடக்கைக் குமரன்நற் றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற் காயையம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா கின்றநம் பல்லவனே.

56

சுந்தரமூர்த்தி நாயனார்

1149.பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரான் பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே.

57


1147. குறிப்புரை: கிரி வில்லவர் - மகாமேரு மலையாகிய வில்லை உடையவர்; சிவபெருமான். கீழ்மை சொல்லுதல் - இழித்துரைத்தல். திருஇல்லவர் - நல் ஊழ் இல்லாதவர்; பாவிகள். வரி வில்லவர் - வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவர். விரை - நறுமணம். வரிஞ்சை - வரிஞ்சையூர்.

1148. குறிப்புரை: சத்தித் தடக்கைக் குமரன் - முருகக் கடவுள். அவனுக்குத் தாதை சிவபெருமான். தானம் - தலங்கள். 'தானம் எல்லாம் சென்று, என ஒரு சொல் வருவிக்க. முத்திப் பதம் - மோட்சமாகிய அந்த ஒரு பதவியின் பெருமையைப் பற்றியே. முடி அரசு ஆம் அத்தில் - முடிபுனைந்து ஆள்கின்ற அரசர் ஆகின்ற அதைவிட. அரற்கு ஆள் ஆய் ஐயம் ஏற்றல் மும்மை நன்று என்னும் - சிவபெருமானுக்கு ஆளாகிப் பிச்சை ஏற்று உண்டல் மும்மடங்கு நன்றாகும்' என்று அருளிச்செய்த. இவர் அருளிச் செய்த தனி வெண்பாக்கள் கிடைத்த அளவில் 'சேத்திரத் திருவெண்பா' - எனப் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பல்லவர்கள் தமிழ் நாட்டிற்குப் புதியரானமை பற்றி அவர்களைச் சேக்கிழார் புராணம் "குறுநில மன்னர்" என்றது.

1149. குறிப்புரை: 'தக்கன் வேள்வியில் சூரியன் பல் உதிர்க்கப்பட்டான்' என்பது புராணம். செங்கதிரோன் - சூரியன்.