| உறுமனை யொண்கவ ரோவியக் கிள்ளைக்கு நும்பதியிற் சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை நீட்டுவர்; சேயிழையே. | | 47 | | 1229. | இழைவள ராகத்து ஞானசம்பந்த னிருஞ்சுருதிக் கழைவளர் குன்று கடத்தலுங் காண்பீர் கடைசியர்,நீள் முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும் மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. | | 48 | | 1230. | வயலார் மருகல் பதிதன்னில், வாளர வாற்கடியுண்(டு) அயலா விழுந்த அவனுக் கிரங்கி யறிவழிந்த |
எவ்விடத்தார்? இவண் மீள வருவார் கொல்லோ! வாரார் கொல்லோ!' என ஐயுற்று அலமருதல் கண்டு தலைவன் 'எம் இடம் அணித்து' எனக் கூறித் தேற்றியது. 'மென்குழலாய்! சேயிழையே! என் ஊர்ச் சுவர் ஓவியக் கிள்ளையை (உண்மைக் கிளி என்று நினைத்து)நும் பதியில் சிறுமிகள் அருகில் சென்று அங் கையை நீட்டுவர்; அஞ்சல்' என முடிக்க. 'அத்துணை அணித்து' என்றபடி. குறு மனம் - விரிவடையாத மனம். அஃதாவது, உலகப் பற்று மிக்க மனம். 'அத்தகைய மனங்கள் தம் உள் நினைத்தறியாத தமிழாகரன்' என்க. நகு மதி - ஒளி வீசுகின்ற சந்திரன். மனை - மாளிகை. 1229. குறிப்புரை: இப்பாட்டு, உடன்போக்காகச் சென்ற தலைவன் தலைவியரை எதிர் கண்டோர் தம் ஊரில் வந்து தங்க வேண்டி அவ்வூர் அணிமை கூறியது. இழை - நூல், ஆகம் - மார்பு. சுருதி - சுருதிபோல எழுகின்ற சுருதி. 'சுருதியை உடைய கழை' - என்க. கழை - மூங்கில் மூங்கிற் புழைகளில் இயற்கையாக வீசும் காற்றால் இசை தோன்றுதல் இயல்பு. முழை - வளை. சாலி - நெற் பயிர். கிளைத்தல், இங்கே, வெளிப்படச் செய்தல். கடைசியர் நண்டு தங்கட்கு அகப்படுத்த பொருட்டு நெற்பயிரைச் சாய்க்கும் பொழுது அப்பயிரினின்றும் முத்துக்கள் வெளிப்படுகின்றன என்க. முத்துக் 'கிளைக்கும் வயல், பொழில் சூழ்ந்த வயல்' எனத் தனித் தனி முடிக்க. குடுமி, அதனை யுடைய குன்றினைக் குறித்த ஆகுபெயர், 'இக்குன்றினைக் கடத்தலும், இதனைச் சூழ்ந்த பொழிலை அடுத்துள்ள வயல்களைக் காண்பீர்' என்க. மழை - மேகம். வயலைக் கூறவே ஊர் 'அவ்விடத்து உள்ளது' என்பது தானே விளங்கும். 1230. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. அயலா விழுந்த அவன் - தன்னூரிலும் இல்லாமல், மாமன் ஊரிலும் இல்லாமல் அயலூரில் இறந்த அந்த வணிகன். அவ்வூர்
|