| வென்றகழ றொழப்புகுமெய் யடியவர்கண் | | மனமிவர்ந்து விலங்கல் சேர | | ஒன்றுமணி பலகுயின்ற சோபான | | மடுத்துயர்ந்த வோக்கங் காட்டும். |
(இ - ள்.) நெருங்கிய கதிர்களோடு கூடிய பசிய நெற் பயிர்கள் பூமிக்கு மேலே எழுந்து தோன்ற, அந்நெற் பயிருக் குயர்ந்து சோலைகள் தோன்றா நிற்க வாசனை பரிமளிக்கின்ற சோலைக்குயர்ந்த மதில் தோன்றுகின்ற பெரிய காட்சியானது, வள்ளி நாயகியார் திருக்கணவராகிய முருகக் கடவுளின் மேம்பட்ட திருவடிகளை வணங்கச் செல்லும் மெய்யடியவர்கள் மனங்களானவை ஏறித் தணிகை மலையை யடையப் பொருந்திய பல மணிகள் பதித்த படிகளானவை யொன்றை யொன்று அடுத்துயர்ந்த எழுச்சியைக் காட்டாநிற்கும். (வி - ம்.) இவர்ந்து - ஏறி. சோபானம் - படி. ஓக்கம் - எழுச்சி. (14) | வளச்சாலி மலர்ப்பொழின்முன் றலைவணக்கு | | மலர்ச்சோலை மதின்முன் காய்த்த | | தளிர்ச்சாகைத் தலைவணக்குந் தடமதினீள் | | கிரிமுன்மிசை தரித்து வானம் | | அளப்பான கொடித்தலைகள் வணக்குமருஞ் | | சாதிமுன்னோர்க் கடுத்த பின்னோர் | | திளைப்பான மகிழ்சிறக்க முறைநின்று | | தலைவணக்குஞ் செய்கை மான. |
(இ - ள்.) அருமையான உத்தம குலத்திற் பிறந்த மூத்தோர்களுக்கு அடுத்த பின் பிறந்த இளையோர்கள் அனுபவித்தற் கேதுவாகிய மகிழ்ச்சி அதிகரிக்க முறையாக நின்று தலையால் வணக்கம் செய்யும் தொழிலை யொப்ப, வளத்தையுடைய நெற்பயிர்கள், தாம் பிறந்த இடமாகிய மருத நிலத்தின்கண்ணுள்ள (தன்னின் முற்பட்ட) சோலைகளின்முன் தலையை வணக்கி நிற்கும். மலர்களோடு கூடிய சோலைகளானவை தாம் இருத்தற் கிடமாகிய மருதநிலத் தூர்களினுள்ள மதில்களின் முன்னர்க் காய்க்கப்பெற்ற தளிர்களோடு கூடிய தலைகளை வணக்காநிற்கும். நீண்ட தணிகை மலைமுன் அப் பெருமை பொருந்திய மதிலானது தன் மேலே தாங்கப் பெற்று ஆகாயத்தை யளப்பதற் கேதுவான கொடியாகிய தலைகளை வணக்காநிற்கும். (வி - ம்.) அருஞ்சாதி முன்னோ ரென்பதற்கு அந்தண ரெனப் பொருள் கொண்டு அவர்க்கு அரசரும், அவர்க்கு வணிகரும், அவர்க்கு வேளாளரும் வணக்கம் செய்யும் தன்மைபோல எனப் பொருள் கூறினுமமையும். முன்னர்ச்சாதி என்றது குலத்தை என்க. "திணைகுலம் ஒழுக்கம் சாதி" என்னும் நிகண்டா னறிக. முன்னோர் - வயதின் மூத்தோர். பின்னோர் - ஆண்டி லிளையோர். "அடுத்த பின்னோர்" என்றதனால் காலத்தாற் பிற்பட்டவ ரென்க. பின்முன் என்பன காலத்தைக் குறித்து நின்ற பெயர்கள். (15) |