| கொடியனவே குளிர்பொதும்புங் கொடியனவே | | யிஞ்சியுங்கோ புரமுஞ் சாலக் | | கொடியனவே யிவைமுறையாற் கொழுங்கண்மடுத் | | தலர்தூற்றுங் குறுகார் சேரின் | | அடிபெயரா தவ்வுழியே தலைதுமிக்கும் | | பொறிபடைக்கு மலரி யாதி | | மிடிதுளக்குந் தேவர்தமை யாறலைத்துக் | | கலக்கநனி விளைத்துத் தட்கும். |
(இ - ள்.) குளிர்ச்சி பொருந்திய சோலைகள் கொடிய தன்மையுடையன. (படர் கொடியை யுடையன) மதிலும் கொடிய தன்மையுடையன. (துகிற் கொடியை யுடையன) கோபுரங்களும் மிகவும் கொடிய தன்மையை யுடையன. (அவிட்ட நாள்களை யுடையன.) இவைகள் முறையே (கொழுவிய கள்ளை யுட்கொண்டு பழிச் சொல்லைத் தூற்றும்) கொழுவிய கள்ளை நிறைத்துப் பூக்களைச் சொரிதலாற் கொடியனவாம். பகைவர்கள் வரின் பிறக்கடியிடா வண்ணம் அவ்விடத்தே யவர்கள் தலையை வெட்டும்படியான இயந்திரங்களை யுடையனவாம். வறுமையால் நிலை பெயர்கின்ற சூரியன் முதலாகிய தேவர்களை ஆகாய வழியில் வருத்திக் கலக்கத்தை யடைய மிகுதியாகத் தடை செய்வனவாம். (வி - ம்.) பொதும்பு கொடியன - படர்கொடியை யுடையன வாதலால் கள்ளை நிறைத்தலர் தூற்றுமென்க. கொடியோர் கள்ளைத் தம்முட் கொண்டு பழிச்சொற் கூறுவர். இஞ்சி கொடியன - மதில் துகிற் கொடியுடையன வெனச் செம்பொருளாகக் கொள்க. கொடிய தன்மையை யுடையன வெனப் பொருள் கொள்ளுங்கால் அண்மிய பகைவர் தலையை அப்பொழுதே துமிக்கும் இயந்திரங்களை யுடையன ஆதலிற் கொடிய தன்மையை யுடையன எனச் சிலேடைப் பொருள் கொள்க. கோபுரமுஞ் சாலக் கொடியன - கோபுரங்கள் அவிட்ட நாளிடத்தைத் தம்பாலுடையன வெனச் செம்பொருள் கொள்க. கொடிய தன்மையை யுடையனவாகிய இராகு கேதுக்களைப் பொருந்தி நிற்றலாற் கொடுந்தன்மையை யுடையனவெனச் சிலேடைப் பொருள் கொள்க. அவிட்டத்தின் பெயர் - காகப்புள். காகத்தின் பெயர் கொடியாதலின் அவிட்ட நட்சத்திரங்களை யுடைமையால் கொடியன வென்றார். கொடி யென்பது பாம்பிற்கும் பெயராதலால் பாம்பாகிய இராகு கேதுக்களைப் பொருந்தி நிற்றலால் கொடியன வென்றார். துமித்தல் - ஈண்டு வெட்டுதல். அலரி - சூரியன். ஆதி - முதலான. "அலரியே யரியேபானு" எனும் நிகண்டா னறிக. மிடி - வறுமை. ஆறு - ஈண் டாகாயவழி. அலைத்து - வருத்தி. "அலைப்பினும் குழவி யன்னே யென்றோடும்" எனும் நான்மணிக் கடிகையா னறிக. தட்கும் - தடுக்கும். "ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே" (புறம்.) என்னுமிடத்து இப்பொருட்டாதலை யறிக. (16) | கடியனவே யகன்வயலுங் கடியனவே | | தண்டலையுங் கயமுஞ் சாலக் | | கடியனவே யிவைமுறையா லுழுதுழக்கிப் | | புண்படுக்கக் கலங்கு மாதர் |
|