பக்கம் எண் :

210ஆத்மாநாம் படைப்புகள்

ரஃபேல் ரட்
சமூக ஆய்வாளருக்கான போதனைகள்

பழம் பாசிக் கண்களுடைய குவிந்த கோபுரங்கள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
அவசரத் தூக்க - வீடிழந்து துன்புற்ற
மற்றும் தாமதித்த - ஊர் சுற்றிகள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் மாடிப்படி ஏறுகையில்,
எதிரொலிக்கும் நடைவழிகள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மற்றும் நாய்களின் கோபமான,
தன்னிச்சையான உறுமல்கள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் கதவைத் திறக்கிறீர்கள்,
அதன் தங்க முலாம் எண் விழுகிறது.
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
வெளிச்சமான பல்பின் கிறுக்கு சக்தி,
வெண்ணிற சாய்வான அவர்கள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
உள்ளிருக்கும் கண்ணாடிகள்
தாங்களே எதிரொளித்து வீழும்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் பாசாங்கு செய்வதாய்த் தெரியும்
அதே பரிதாப ஆசை
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
இது ஒரு வலை இல்லை எந்த எதிரியும் இல்லை.
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மற்றும் அவர்கள் போய்விட்டார்கள்.
ஒற்றையானவனும் கூட
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
உங்கள் பழுப்புப் பையைப் பாருங்கள்
அதன் மஞ்சள் உறுதிமொழிகள்
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் புண்படுத்தப்பட்ட அழகான குடும்பங்கள்
மற்றும் புலன்கள்