100 மரவுரியும் சடைமுடியும் காணு வதற்கோ குதிகுதித்தோம் எனத்தங்கள் வாயோடுவாய் பேசாமலே மனம் மடிந்தார் சிலபேர்கள் 2. அய்யோ இந்த அருமைத் திருமகன் மெய்யே வனம் போனால் நமக்கினி ஆறுதலை ஏதெனக் கண்பிசைந் தழுதார் சிலபேர்கள் செய்யாவினை செய்திடும் பாதகி கைகேசிக்கு இன்றைக்கு நெஞ்சுக்கல் திடுக்கெனவே விழுந்ததோ எனமனம் திகைத்தார் சிலபேர்கள் 3. கண்ணுக்குக்கண் அருகே எண்ணின எண்ணமெல்லாம் போச்சே நாம் அந்தக் காடே கதியாய்ப் போவோம் என்று கரைந்தார் சிலபேர்கள் பண்ணினதவம் இதுக்கோ தசரதன் புண்ணியவான் ஆனால் ஒருதரம் பழிகாரி சற்றழையாளோ என்று பதைத்தார் சிலபேர்கள் 4. சொல்லிய வரம் தாவென்று கணவனைக் கொல்லவே வழிபார்த்தாள் அல்லாமல் தூரதிருஷ்டியாப் பார்த்தாளோ என்று துடித்தார் சிலபேர்கள் கல்உருகவும் புல்உருகவும்கண்ட கைகேசிக்குத் தன்மகன் மாத்திரம் கரும்போ இவன் வேம்போ எனமனம் கசிந்தார் சிலபேர்கள் 5. முறையோ என்ன மூடப்பிள்ளையாகிலும் முந்தின பிள்ளை என்று சொல்லும்பழ மொழியாகிலும் ராமனுக் கில்லையோஎன் றழுவார் சிலபேர்கள் குறையாமலே இருக்கின்ற சூரிய குலத்திலே நல்ல மரத்தில் புல்லுருவிபோல் குடிகேடி எங்கிருந்தாள் எனக்குலை குலைந்தார் சிலபேர்கள் 6. மையார் கண்ணி இளையவள் தோதக வலையிலே சிக்கித் தலைமகன் ராமனை மன்னவன் செய்ததென் சொல்லு வேமென்று வைதார் சிலபேர்கள் |