99 2. அன்னை கொண்டவரம் என்னஎன்னைத் தள்ளவோ அழகுக் கோயில் எடுத்தது நிலம்ஊன்றிக் கொள்ளவோ குன்னமோ உனக்கென்னைத் தாரம் கொடுத்தவன் மேலல்லோ நேரம் என்னை இட்டுக் கொண்டுபோவதோ பாரம் இதுவோ ஆண் பிள்ளைக்கு வீரம் (எப்) 3. நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர்சொல்ல வேணும்-அத்தை நான் நினைத்துக் கொண்டிறந்தால் அங்கேபிறக்கலாம் காணும் கூடிநாம் உகந்திருக்கும் காடு குறைவில்லா என்மிதிலை நாடு காடு நீர்இல்லாத வீடு கால்வையும் தெரியும்என் பாடு (எப்) ------ ஸ்ரீராமர் வனம் ஏகலால் புரசனங்கள் புலம்பல் விருத்தம்-16 ஆவதனால் சீதைமன தறிந்து ராமன் அப்படியே வருகஎன்றான் வெளியே வந்தாள் தேவர்களும் முனிவர்களும் கலங்கி நின்றார் செயராமன் லட்சுமணன் சீதை என்னும் மூவர்களும் மரவுரியை உடுத்திக் கொண்டார் முறையாலே அயோத்திநகர்த் தெருவின் மேலே போவதுகண் டவ்வூரில் ஆணும் பெண்ணும் புலம்பினார் கண்ணீர்விட் டலம்பி னாரே திபதை-6 காம்போதி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. அரசுமணி முடியொடு ஆனைமேல் வருகிற திருக்காட்சியைக் காணாமல் அந்தந்தத் தெருவீதியிலே வந்து நொந்தார் சிலபேர்கள் |