98 குன்னமா எண்ணாதே தெய்வம் பண்ணியதிருக் கூத்துக் கென்ன செய்யலாம் லட்சுமணா 8. கர்த்தன் ஆனராமன் சித்தத்திலே எண்ணும் கட்டளைப் படிதானே லட்சுமணா புத்தியாகச் செய்தால் அப்போதல்லோ என்தன் புத்திரன் நீ போய்வாடா லட்சுமணா ----- ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் விருத்தம்-15 மண்ணும் இரங்க மரமிரங்க மறுதா யாரை அனுப்பிக்கொண் டெண்ணும் இரங்கும் லட்சுமணன் இசைந்து வரவே ரகுராமன் நண்ணும் சனகி தனைப்பார்த்து நான்போய் வருவேன் ஈரேழு பண்ணும் பருவம் வனமென்றான் பரந்தாள் சீதை கரைந்தாளே தரு-9 உசேனி ராகம் ரூபகதாள சாப்பு பல்லவி எப்படி மனந்து ணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன் என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்ப) அநுபல்லவி எப்பிறப்பிலும் பிரிய விடேன் என்றுகை தொட்டீரே ஏழையான சீதையை நட் டாற்றிலே வீட்டீரே (எப்) சரணங்கள் 1. கரும்பு முறித்தாற் போலே சொல்ல லாச்சுதோ-ஒருக் காலும் பிரியேன் என்று சொன்னசொல் போச்சுதோ வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல வார்த்தையால் கொல்லாமல் கொல்ல இரும்பு மனது உண்டாச்சு தல்லோ என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்) |