97 திபதை-5 பைரவி ராகம் அடதாளசாப்பு கண்ணிகள் 1. இந்தாமரவுரி அந்த வனத்தில் கொண் டேகுடன் ஈதென் வார்த்தை லட்சுமணா அந்த வார்த்தையே மந்திரமா அண்ணன் அடிபூசை செய்யடா லட்சுமணா 2. அண்ணன் இவன்மணி வண்ணனே என்றெண்ணி அரைநொடி பிரியாதே லட்சுமணா கண்ணின் இமைபோலே எண்ணமெல்லாம் செய்து கட்டிக்காத்திருடா லட்சுமணா 3. வெம்பிய காட்டினில் அரக்கர்வந்தால் அண்ணன் முன்போய்நீ நில்லாடா லட்சுமணா தம்பி உடையவன் படைக்கஞ்சான்என்னும்சொல் சாதித்துக் கொள் அடா லட்சுமணா 4. அலையாழி புரண்டாலும் அண்ணன் இருக்கஉன்னை ஆரால் என்ன செய்யல்ஆம் லட்சுமணா மலைமீதில் இருப்பாரை பன்றி பாய்வதுண்டோ மயங்காதே தியங்காதே லட்சுமணா 5. உளங்கொண்டு அண்ணன் எப்படிச் சொல்வானப்படி ஊழியங் கேளடா லட்சுமணா இளங்கன்று பயம் அறியா தென்றாற் போல நீ எதிர்த் தொன்றும் சொல்லாதே லட்சுமணா 6. தாயே சீதைஉன் தகப்பன் ராமன் இந்த தலமே வனம் அடா லட்சுமணா ஆயாசம் பாராதே எள் என்னுமுன் எண்ணெய் ஆகச் செய்துவாடா லட்சுமணா 7. பின்னும் சடையும் மரவுரியும் காணவோ ராமன் பிறகே வந்தேன் என்று லட்சுமணா |