பக்கம் எண் :

96

தரு-8

மத்திய மாவதி ராகம்                           ஆதிதாளம்

பல்லவி

     இத்தனைக் கோபமும் நல்லாய்-வந்ததுஏதடா
     தம்பிஇது சொல்லாய்                      (இத்தனை)

அநுபல்லவி

தத்துவம் ஆக உன்தன்     புத்தியெல்லாம் வெள்ளை
தகப்பன் பேர் விளக்கிற     பிள்ளை அல்லோ பிள்ளை (இத்)

சரணங்கள்

1.    இரும்போ தாய்மனம் காட்டிலே            போய்த்திரி
          என்னவும் வாய்வருமோ நீஅத்தைப்    பரிகரி
     கரும்பு கசப்ப தெல்லாம் வாய்க்குற்ற        மேசரி
          காலம்செய்த தல்லாமல் ஆர்செய்தார்  அரிகரி (இத்)

2.    தகப்பனைச் சத்திய வாக்கியன் அல்லனென்று  கழிக்கவோ
          தாய்கொண்ட விரதத்தை முடியாமல்     அழிக்கவோ
     அகத்துணை ஆம்பரதன் செல்வத்தை         ஒழிக்கவோ
          அப்புறம் உனைக்கண்ட பேரெல்லாம்    பழிக்கவோ (இத்)

3.   உரமாகும் தவஞ்செய்தால் உனக்குநல்ல         தோதீதோ
          ஒன்றும் பேசாதே கோட்டைக்குள்ளேபடை வெட்டாதே
     அரசுபரதன் கொண்டால் நமக்கினிமேல்         வாராதோ
          ஆக்கப்பொறுத்தநமக் காறும்மட்டும்       பொறாதோ(இத்)

-----

சுமித்திரை லட்சுமணருக்குப் புத்திசொல்லல்

விருத்தம்-14

     அற்புதத் தம்பி கோபம் ஆற்றியே ராமன்தாயார்
     பொற்பதம் வணங்கும் போது பூவைகை கேசி ஏவ
     வற்கலை மாதர்காட்ட வாங்கிலட்சுமணா நீஎன்
     சொற்படி கொடுபோ என்று சுமித்திரை கூறு வாளே