பக்கம் எண் :

95

 தரணியில் சர்க்கரையும் மாவும் சரியாயெண்ணும்
     தசரதனும் கிடந்து                        மனம்வாட

இரவின்முன் பனிபோல என்னோ டெதிர்ந்தமன்னர்
     எவரும் பயந்துவிடு                       துகள்போட
அரசிட்ட சாமிக்குத் தவசிட்ட நீலிமகன்
     ஆட்டுக்குட்டிபோலே ஓடக்கேட்டும் கைகையும் தள்ளாட  (நானே)

2. தொகுத்த காளிநடிக்க கூளிதாளம் பிடிக்க
     துண்டங்கள் எதிராகப்                     படமாட்டி
 பகைத்த ராசர்தலை பனங்குலை போல்உதிரப்
     படுகளம் எங்கும் ரத்தக்                    கடல் மூட்டி
 இகத்தில் நானேஅடிமை ராமனே ஆண்டவன்
     என்ப தெல்லார்க்கும் தெரி                 வுறக்காட்டி
 வகுத்தபிர் மாதிதேவர் வந்தாலும் அவரவர்
     மர்மம் எல்லாத்தையும் ஓட்டி தர்மத்தை      நிலைநாட்டி(நானே)

3. சுட்டமண்ணும் பச்சைமண்ணும் ஒட்டுமோசாமி
     துணையல்லால் எனக்குண்டோ                   உபகாரம்
  எட்டிப்பறந்தாலும் ஊர்க்குருவி கருடன்ஆமோ
     இந்தப் பரதனுக்கேன்                      அதிகாரம்
  வெட்டித்தலை தலையாக் குவியா விட்டால் என்கை
     வில்லாலே ஆவதுண்                     டோவீரம்
  பொட்டெனவே அயோத்திப் பட்டணம் எல்லாம்வந்து
     போர்தொடுத்தாலும் விட்டூரம் ஆர்தொடுத்தாலும் இந்நேரம் (நா)

-----

ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தணித்தல்

விருத்தம்-13

சினங்கொண்ட இளையோன் இங்கே சீறியே சொல்லும் ஓசை
கனங்கொண்ட ராமச்சந்திரன் காதிலே விழக்கண் டோடி
இனங்கொண்ட தந்தை வார்த்தைக் கெதிர்உண்டோ தம்பீ என்று
மனங்கொண்டு தேற்றிக் கோபம் மாற்றுவான் ஆற்று வானே