42 துங்கமுள்ள அந்தவில்லை வளைவு காணத் தொடக் கண்டார் இரண்டுதுண்டாய் விடக்கண் டாரே தரு-14 தோடிராகம் ஆதிதாளம் பல்லவி வில்லானது ரண்டாய் ஒடிந்து விழுந்ததே பாரில் (வில்) அநுபல்லவி கலியாண ராமன் அனகன் கையால் மிதிலையில் வாழ் சனகன் (வில்) சரணங்கள் 1. சுத்திப்பெறும் முனிவோர்கள் மங்கள் சோபனங்கள் கூற பத்துத் திசை வானவர்எல்லோரும் பனிமலர்மாரிகள் தூற சித்தப் பிரமையாலே நாலிரு திசையானைகள் தலை பீற கத்திப் பிடியிடையாள் சானகி காதலெண்ணம் நிறை வேற(வில்) 2. சிங்கார மகா ரவிகுலமே சிலாக்கியம் என்னஒளி வீச உங்காரம் செய்தரசர் எல்லோரும் ஒருத்தர் போலமுகம் கூச இங்கேபெண் சீதைசெய்தவப்பலன் லபிச்சுதென்றுபலர் பேச கெங்காதரனல்லால் ஒருவருக்கும் கிளப்பஒண்ணாதமகாப்பிரயாச(வில்) 3. தருமாகம சாஸ்திரகோடிகளும் சகல வேதங்களும் பாட வருமா முனிவிசுவாமித்திரன் சொல் மறுவில்லாதபடி கூட ஒருகாலனும் இந்தஓசைதனை ஓர்க்கொணாமல் செவி மூட திரமாஇனி இவனே கோதண்டதீட்சர குருஎன்றுகொண் டாட(வில்) ------ மிதிலைக்குச் சக்கிரவர்த்தியின் எழுச்சி விருத்தம்-16 நண்ணரிய வில்லதுநாண் ஒடிந்த பின்பு நடைத்தூதர் கலியாண ஓலை காட்ட அண்ணல்எனும் தசரதனும் பயண பேரி அதுமுழங்கத் தேவியரும் படையுங் கூடத் |