பக்கம் எண் :

43

தண்ணுலவு சந்திரகிரி பிறவும் சென்றான்
     சனகேசன் சதுரங்க தளத்தி னோடே
எண்ணரிய களிப்பாக வழிமேற் கொண்டே
     எதிர்வந்தான் உடன்மிதிலைப் பதிவந் தானே.

தரு-15

சாவேரி ராகம்                            ஆதிதாளம்

பல்லவி

     ராசனாம் தசரத ராசன்-சனகமகா
     ராசன் பதிக்கு வந்தானே                   (ராச)

அநுபல்லவி

     வாசவன் பணிராக வேசன் கல்யாண ஓலை
     வாசகம் கண்டுவிசு வாசநேசம் உண்டாகி      (ராச)

சரணங்கள்

கொட்டமிடுங் கெசமும்          அட்டமிடுந்துசமும்
எட்டிய குதிரையும்             கட்டிய தேர்நிரையும்
இட்டமுள்ள ராசரும்            அட்டாள தேசருமாய்ப்
     பட்டவர்த்தனர்           இணங்க-கப்பணம்
     இட்டுமறவர்              வணங்க

வட்ட வெண் குடையும் முடிகளும் துலங்க
மகர தோரணங்கள் முறை முறை   இலங்க
சட்டமான திசை எட்டின்மேலும்படை

     மட்டில்லாமல்             கூட
     கட்டியம்                 போட
     பெண்கள்                பாட
     கொண்                  டாட      (ராச)

2.    உச்ச மாணிக்கத்தாலே      தச்சபல்லக்கின் மேலே
     அச்சுதன் தாய்முதலா       மெச்சிய தேவிமார்கள்
     இச்சையால் முன்னேபோ    கச்செய்து பின்னாகவே

          பச்சைப் பைங்கிளி     என்னவே-பாங்கியர்
          மொய்ச்சுக் கொண்டு   துன்னவே