பக்கம் எண் :

44

     வச்சிர பாணி என்ன மலர் முகம் மின்னவே
     மண்ணும் விண்ணும் என்ன அதிசயம் என்னவே
     உச்சி மீது கரம் வைச்சு மன்னவர்கள்

     எச்சரிக்கை           பேச
     கவரி               வீச
     வெகுவி             லாச
     உல்                லாச           (ராச)

3.   மெத்தப் பெருஞ்சேனைகள்       சுற்றத் துந்துமிபேரி
     சத்த மேகம் போல் ஆர்க்க      அத்திசையிலேநின்று
     சத்திர பதி சனகன்              நெற்றிநேராகவர

          முற்றிய கடல்             மேலே-புகுந்த
          மற்றொரு கடல்            போலே

     பத்தியாகஇரு படைகளும்         கலந்து
     பார்த்திரண்டுராசரும் முகம்       மலர்ந்து
     வெற்றி ஏறியபு சத்திலே              அவனை

          ஒற்றியணைத்து            மாற்றி
          மிகுந்த                   கீர்த்தி
          படைத்த                 மூர்த்தி
          அ                      யோத்தி        (ராச)

-----

ஸ்ரீராமர் பவனிவருதல்

விருத்தம்-17

    வந்ததச ரதராசன் தன்னை முன்னே
         வந்திருந்த ராமனும்தம் பியும்போய்க் கண்டார்
   அந்தஇரு வருந்தந்தை அருளைக் கொண்டார்
         அரசர்இரு வரும்பின்னே வரமுன் சென்றார்
   பந்தமுள்ள மிதிலை வீதியிலே தேர்மேல்
         பவனிவரும் ராமனைக்கண் டாசை கொண்டு
   செந்திருவை நிகரான பெண்கள் பின்னே
         செல்லுவார் மதிமயங்கிச் சொல்லுவாரே